Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

150 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைப்பு

வர்தா புயலால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 150 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 12-ம் தேதி வர்தா புயல் காரணமாக அதிகாலை முதலே கனமழை பெய்தது. மேலும், புயல் கரையை கடக்கும்போது, பல்வேறு கட்டடங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கி சிலருக்கு காயம் ஏற்பட்டது. முக்கியமாக மழையில் நனைந்த பலருக்கும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் தாக்கியிருக்கக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழக அரசு சார்பில் 150 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மருத்துவக் குழுக்களில் ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், உதவியாளர், ஓட்டுநர் என 5 பேர் இடம் பெற்றுள்ளார்கள். இவர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close