Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐன்ஸ்டீன், பிகாஸோ, ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்பீல் பெர்க்... என்ன ஒற்றுமை ? #DyslexiaAlert

டிஸ்லெக்சியா

‘‘ன்  பையன் ஆக்டிவ்வாத்தான் இருக்கான். சினிமா பாட்டை ஒரு வரி விடாமல் பாடுறான், விராட் கோஹ்லி ரெகார்ட்ஸ் பற்றிக் கேட்டா சரளமா ஒப்பிக்கிறான். அஜித் பேசும் டயலாக்குகளை அச்சரம் பிசகாமல் சொல்றான். ஆனா படிக்கும்போது மட்டும் மிகவும் தடுமாறுகிறான். தப்புத் தப்பா எழுதறான். என்ன பிரச்னைனே தெரியலை...” இப்படி சில பெற்றோர் புலம்புவதைக் கேட்டிருக்கலாம். குழந்தைகளுக்குப் படிப்பதிலும் எழுதுவதிலும் பிரச்னை இருந்தால் அது வாக இருக்கக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஐன்ஸ்டீன், ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், முகம்மது அலி, டாம் குரூஸ் உள்ளிட்ட  பல ஆளுமைகள் டிஸ்லெக்சியா பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தவர்களே. டிஸ்லெக்சியா பிரச்னை ஏன் ஏற்படுகிறது? டிஸ்லெக்சியா குழந்தைகளை எப்படி எதிர்கொள்வது என்று பார்ப்போம்.  

டிஸ்லெக்சியா என்றால் என்ன ?

‘லெக்சியா’ என்றால் மொழியின் அமைப்பு எனலாம். டிஸ்லெக்சியா என்பது மொழி அமைப்பைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் பிரச்னை. 

மூளையில் செயல்படும் நியூரான்களின் செயல்திறனில் ஏற்படும் குறைபாடு, டிஸ்லெக்சியா என்றழைக்கப்படுகிறது. இது பிறக்கும்போதே ஏற்படும் நரம்பியல் மற்றும் மரபணுக் (Neurological and Genetic Disorder) குறைபாட்டால் ஏற்படுகிறது. 

குழந்தைகள் கண்களால் காணும் ஒரு மொழியின் எழுத்துக்கள், மூளை நரம்புகள் வழியாகச் செல்லும்போது அதற்கு ஏற்ப புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்த புரிதலில் மாற்றம் ஏற்படும் போது, உதாரணமாக ‘d’ என்ற எழுத்து ‘b’ என்ற எழுத்தாக புரிந்துகொள்ளப்படும்போது வாசிப்பதில் பிழை ஏற்படுகிறது. இந்தக் குறையையே நாம் டிஸ்லெக்சியா என்கிறோம்.

காரணம்

டிஸ்லெக்சியா யாருக்கு வேண்டுமானாலும் வர வாய்ப்பு உள்ளது. இந்தக் குறைபாடு ஏற்படக் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது மருத்துவ உலகில், இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. முன்னோர்களது மரபணுவில் கோளாறு இருந்தால் இது குழந்தைகளுக்கும் ஏற்பட வாய்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.  

அறிகுறிகள்

இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகள், பொதுவாக மூன்றில் இருந்து நான்கு வயதுள்ளபோதுதான் கண்டறியப்படுவர். எப்போதும் தனிமையில் இருப்பது, வகுப்பில் ஆசிரியர் கேள்வி கேட்கும்போது, எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது, எப்போதும், சுறுசுறுப்பாக எதையாவது செய்துகொண்டே இருப்பது (Hyperactive child) போன்ற செயல்கள் இவர்களை மற்ற மாணவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும்.

இந்த ஆரம்ப அறிகுறிகளை வைத்து மட்டும் குழந்தைக்கு டிஸ்லெக்சியா உள்ளதென்று முடிவுக்கு வந்துவிட முடியாது. முதலில் குழந்தைக்குப் பார்வை மற்றும் கேட்கும் திறன் சரியாக உள்ளதா எனப் பரிசோதனை செய்ய வேண்டும். அனைத்தும் சரியாக இருந்தால், மூளை மற்றும் நரம்பியல் நிபுணரிடம் காட்ட வேண்டும். அவர் கீழ்கண்ட சோதனைகளைச் செய்வார்.

 

・    வயதுக்கேற்ற ஐக்யூ பரிசோதனை

・    பேசும் திறன்

・    வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும் திறன் மற்றும் வேகம்

・    வார்த்தை உச்சரிப்பைப் புரிந்துகொள்ளும் திறன்

・    எழுத்துக்கள் மற்றும் ஒரே மாதிரி ஒலிக்கும் சொற்களைப் புரிந்துகொள்ளும் திறன்

・    தாய்மொழியை சரளமாகப் பேசும்திறன் / வேகம்

・    புத்தகத்தில் படிக்கும் சொற்களைப் புரிந்துகொள்ளும் திறன்

・    பாதிக்கப்பட்ட குழந்தையின் முன்னோர்களின் தகவல் 

 

இந்த சோதனைகளின் அடிப்படையில் குழந்தை எந்தளவு டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டுள்ளது என்று கண்டறிய முடியும். 

பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன?

  • தாய்மொழியையும் கணித எண்களையும் கற்கச் சிரமப்படுவர்.
  • எழுத்துக்களில் இருக்கும் வேறுபாடுகளை அறிய முடியாமல் திணறுவர்.
  • சொற்றொடர்களைச் சரளமாகப் படிக்க முடியாது.
  • நோட்டுப் புத்தகத்தில் அதிக எழுத்துப்பிழைகளுடன் எழுதுவர்.

தீர்வு

  • இந்தக் குறைபாட்டை, மருந்து மாத்திரைகளாலோ, மருத்துவ சிகிச்சைமுறையின் மூலமாகவோ குணப்படுத்த முடியாது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்தக் குறைபாட்டை எதிர்கொள்ள வேண்டும். குறைபாட்டின் தாக்கத்தை மட்டும், இவர்களுக்கான பிரத்யேகப் பயிற்சி வகுப்புகள் மூலம் குறைக்கலாம்.
  • தமிழகத்தில் பல பெற்றோர்களுக்குத் டிஸ்லெக்சியா பாதித்த குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகள் இருப்பதே தெரியவில்லை. இந்த மாணவர்களுக்கு ஆரம்பப் பள்ளியில் இருந்தே சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவர்களுக்குப் பாடம் நடத்த, முதலில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி தேவை. 
  • டிஸ்லெக்சியா மாணவர்கள் புத்தகக் கல்வியில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். எந்த விஷயத்தையும் நேரடியாகப் பார்த்து, தொட்டு உணர்ந்து தெரிந்துகொள்ளவே விரும்புவர். டிஸ்லெக்சியா சிறப்புப் பள்ளிகளில் மாதம் ஒருமுறை தொழிற்சாலைகள், பட்டறைகள் என மாணவர்களை  அழைத்துச் செல்வதால் இவர்களால் நேரடியாக உலகத்தைப் பார்த்து, எளிதில் கற்க முடிகிறது. 
  •  டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள குழந்தைகளை சிறு வயதிலேயே அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தி ஊக்குவித்தால், எதிர்காலத்தில் அவர்களுக்கு விருப்பமான ஒரு துறையில், அவர்கள் மிகப்பெரிய சாதனையாளர்களாக வர வாய்ப்பு உள்ளது. அவர்களுக்குத் தேவை எல்லாம் நமது அரவணைப்பும் ஊக்கமும் மட்டுமே. 
  • அமெரிக்காவைச் சேர்ந்த ‘நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நியூராலஜிக்கல் டிசீஸ்’ என்ற அமைப்பின் ஆய்வறிக்கைப்படி,  உலக மக்களில் 17 சதவிகிதம் பேர், இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையைப் பார்க்கையில், பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளையே இந்தக் குறைபாடு அதிகமாகத் தாக்குகிறது.  

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close