Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எபோலா தடுப்பு மருந்து சோதனை வெற்றி

மேற்கு ஆப்பிரிக்காவில் சோதனை செய்யப்பட்ட எபோலா தடுப்பு மருந்து, உயிர்கொல்லிக்கு எதிராக செயல்பட்டு 100% பாதுகாப்பை அளிப்பதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

’rVSV-ZEBOV’ என்னும் இந்த தடுப்பு மருந்து, 11,241 பேரிடம் சோதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று உலக சுகாதார அமைப்பு எபோலா தடுப்பு மருந்து 100% பாதுகாப்பளித்து, எபோலா வைரஸ் தாக்காமல் தடுப்பதாக அறிவித்துள்ளனர்.

1976-ம் ஆண்டில் இருந்து எபோலா தடுப்பு மருந்தை உருவாக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. 2014-ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் தாக்கி 11,000 பேர் இறந்தனர். அதன்பிறகு நோயின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட விஞ்ஞானிகள், தற்போது வெற்றிகரமாக எபோலா தடுப்பு மருந்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அறிவியல் வெற்றியாகக் கருதப்படுகின்றது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close