Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொறித்த மீன் சேர்த்த வித்தியாசமான பெங்காலி மீன் குழம்பு செய்யலாம் #WeekEndRecipe

மீன் குழம்பு

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ...வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'பெங்கால் மீன் குழம்பு' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக்.
 

தேவையானவை:
சுத்தம் செய்த மீன் துண்டுகள் - 4
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் 
கடுகு எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 
பிரியாணி இலை - 1
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 100 கிராம்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்
கடுகு விழுது - அரை டீஸ்பூன்(விரும்பினால்) 
பச்சைமிளகாய்(நடுவில் கீறியது) - 2 
நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை டேபிள்ஸ்பூன் 
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
மீன் துண்டுகளுடன் சிறிதளவு மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துக் கலந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் சிறிது கடுகு எண்ணெய் விட்டு, ஊறவைத்த மீனைச் சேர்த்து இருபுறமும் லேசாக பொன்நிறமாகும்வரை வறுத்து தனியாக வைக்கவும். 

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு சேர்த்து வெடித்தவுடன் காய்ந்த மிளகாய், பிரியாணி இலை சேர்த்து, பின் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் நீங்கும்வரை நன்றாக வதக்கவும். அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து லேசான பொன்நிறம் வரும்வரை வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கடுகு விழுது(விரும்பினால்) சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும். 

எண்ணெய் பிரிந்ததும் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கலவையை நன்கு கொதிக்கவிடவும். கொதித்ததும் அதில் பொரித்து வைத்திருக்கும் மீன் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து மேலே மிதக்கும் வரை வேகவிட்டு இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவிவிட்டு பெங்காலி மீன் குழம்பை சூடான சாதத்துடன் பரிமாறவும். 

குறிப்பு: கடுகு விழுதுக்குப் பதிலாக, அரை டீஸ்பூன் கடுகை லேசாக வறுத்து ஆறவைத்து, சிறிது இஞ்சி, பூண்டு, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்தும் பயன்படுத்தலாம்

- கு.ஆனந்தராஜ்
படம் : த.ஶ்ரீநிவாசன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close