Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு

போலியோ

மிழகத்தில் 10 மாத குழந்தை முதல் 15 வயது சிறுவர்கள் வரை, தட்டம்மை, ருபெல்லா அம்மை நோய்க்கான புதிய தடுப்பூசி முகாம் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது என்று, தமிழக சுகாதாரத்துரை தெரிவித்துள்ளது. பொதுவாக, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம், இந்த புதிய தடுப்பூசி முகாமை முன்னிட்டு மார்ச், ஏப்ரலில் மாதங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்டம்மை, ருபெல்லாவால் இந்தியக் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதால், உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைப்படி, மத்திய சுகாதாரத்துறை இந்த தடுப்பூசி முகாமை நாடு முழுவதும் நடத்தத் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

காற்றின் மூலம் பரவக்கூடிய நோய்களான தட்டம்மை மற்றும் ரூபெல்லா அம்மை நோய்கள், குழந்தைகளுக்கு எளிதில் தொற்றக்கூடியவை. இந்த நோய்களின் தாக்குதலால் நம் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 20,000 பேர் பாதிக்கப்படுகிறார்கள். உலகளவில் இந்நோயால் ஏற்படும் மரணங்களில் பாதி இந்தியாவில்தான் ஏற்படுகின்றன. இந்தச் சூழலில் அரசு திட்டமிட்டுள்ள இந்த முகாம்கள் மிக அவசியமானவையாகின்றன.

பிப்ரவரி முதல் வாரம் தொடங்கப்படவுள்ள அம்மை தடுப்பூசி முகாம்கள், அம்மாதம் முழுக்க நடைபெற உள்ளன. அங்கன்வாடிகள், சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்களில், 2 கோடி குழந்தைகளுக்கு
இந்தத் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் தேசிய தடூப்பூசி வரையறைப் பட்டியலில் சேர்க்கப்படவுள்ள இந்தத் தடுப்பூசி, குழந்தைகளின் 10, 16வது மாதங்களில் போட வலியுறுத்தப்படும்.


நாட்டில் போலியோ பாதிப்பை குறைக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம்கள், வருடம் தோறும் ஜனவரி, பிப்ரவரி என இரண்டு கட்டங்களாக நடைபெறும். இந்த முகாம்களால் போலியோ பாதிப்பு படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில், கடைசியாக போலியோ பாதிப்பு நோயாளி கண்டுபிடிக்கப்பட்டது 2011-ம் ஆண்டு என்று கூறப்பட்டுள்ளது. ஆம்!கடந்த 5 ஆண்டுகளாக இந்தியா போலியோ அற்ற தேசமாக ஆரோக்கியத்தில் தேறி வருகிறது. போலியோ அரக்கனிடம் பல்லாயிரம் குழந்தைகளை பலிகொடுத்த தேசம் இன்று இந்த முன்னேற்றம் கண்டிருப்பதன் காரணம், அரசின் போலியோ சொட்டு மருந்து முகாம்கள்தான். தொடர்ச்சியாக வருடா வருடம் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதன் பலனாக, அந்நோய் ஒழிக்கப்பட்டுள்ளது. இப்போது, அடுத்த கட்டமாக தட்டமை மற்றும் ருபெல்லா அம்மை நோய்களை ஒழிக்க களமிறங்கி இருக்கிறது நம் சுகாதாரத்துறை. முழு ஒத்துழைப்பு அளித்து, நம் குழந்தைகளையும் தேசத்தையும் அம்மையின் கேடுகளில் இருந்து காப்போம்!

- பிரதீப் கிருஷ்ணா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close