Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மட்டன் கட்லெட் செய்வது இவ்வளவு ஈசியா? #WeekEndRecipe

சுவையான மட்டன் கட்லெட்

 

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பல வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'மட்டன் கட்லெட்' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. 

தேவையானவை:

கொத்துக்கறி (அ) எலும்பு இல்லாத மட்டன் - கால் கிலோ
உருளைக்கிழங்கு - 100 கிராம் 
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - ஒன்று
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்  - கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
இஞ்சிப் - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
முட்டை - 2 (ஒரு பவுலில் உடைத்து ஊற்றி லேசாக அடித்து வைக்கவும்)
ரொட்டித்தூள் - 50 கிராம்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து நன்கு மசித்துக்கொள்ளவும். கொத்துக்கறியை அல்லது எலும்பு இல்லாத மட்டனை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். அரைத்த மட்டனுடன் மசித்த உருளைக்கிழங்கு, இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். 

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும், மட்டன் கலவையை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, தட்டையாக்கி, முட்டைக் கலவையில் முக்கி எடுத்து, ரொட்டித் தூளில் இருபுறமும் பிரட்டி எடுத்து, சூடான எண்ணெயில் சேர்த்து பொன்நிறமாகப் பொரித்து எடுக்கவும்.

மட்டன் கட்லெட்டுக்கு தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னி  பொருத்தமான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

குறிப்பு: 
கலவையில் விரும்பினால் புதினா இலைகளைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். சுவையும் மணமும் கூடும்

- கு.ஆனந்தராஜ்
படம் : த.ஶ்ரீநிவாசன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close