Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரெட்டிலும் செய்யலாம் உப்புமா! #BachelorRecipe

பிரெட்டிலும் செய்யலாம் உப்புமா. பிரெட் உப்புமா

சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும். இதோ ஆண்களின் கிச்சனுக்குக் கைகொடுக்கும் 'பிரெட் உப்புமா' பேச்சுலர் ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.

தேவையானவை:
பிரெட் துண்டுகள் - 8
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 1
இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:
பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிடவும்.பிறகு சதைப்பகுதியை சிறிய துண்டுகளாக அல்லது பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தீயை மிதமாக்கி, தக்காளி சாஸ், சோயா சாஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதிக்கும் போது நறுக்கி வைத்துள்ள பிரட் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறவும். பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவி சூடாகப் பரிமாறவும்.

- கு.ஆனந்தராஜ்

படம்: த.ஶ்ரீநிவாசன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close