Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காரம் தூக்கலா... செம சூடா... சூப்பர் பெப்பர் இட்லி #BachelorRecipe

சுவையான பெப்பர் இட்லி பேச்சுலர் ரெசிப்பி

சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும். இதோ ஆண்களின் கிச்சனுக்குக் கைகொடுக்கும் 'பெப்பர் இட்லி' பேச்சுலர் ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.

தேவையானவை:

இட்லி - 4 
பொடித்த மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1 
கடுகு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
இட்லியை மீடியம் சைஸ் துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடாக்கி கடுகு சேர்த்து வெடித்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து, கட் செய்து வைத்திருக்கும் இட்லித் துண்டுகளைச் சேர்த்து நன்கு பிரட்டவும். இறுதியாக கொத்தமல்லித்தழையைத் தூவி சூடாகப் பரிமாறவும்.
 

- கு.ஆனந்தராஜ்

படம்: த.ஶ்ரீநிவாசன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close