Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆபத்தாகும் பலூன் வெடி சத்தம்!

மனித காது 140 டெசிபல், சத்தம் வரை கேட்க உகந்தது. சத்தம் அதற்கு மேல் போனால், இதய நோய்கள் உள்ளவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்  காது மந்தம் உள்ளவர்கள் பாதிக்கப் படுவார்கள். அதிக சத்தத்துக்கு முக்கிய காரணம், ட்ராஃபிக் ஹார்ன். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அதற்கும் மேல் பாதிப்பை ஏற்படுத்துவது பலூன் வெடிக்கும் ஓசை எனத் தெரியவந்துள்ளது. என்ன வியப்பாக உள்ளதா ?



பலூனை மூன்று விதமாக உடைக்கலாம். ஊதிய பாலூனை, ஊசியால் குத்துவது, கற்றடைத்த பலூனை நகத்தால் குத்தி வெடிக்க வைப்பது, பலூன் வெடிக்கும் வரை, ஊதுவது. இதில் எதைச் செய்து ஓசை வர வைத்தாலும், 168 டெசிபலுக்குக் குறைவில்லாமல் குறுகிய அதீத சத்தம் கேட்கும். இதனால் இளகிய மனம், பயந்த சுபாவம் கொண்டவர்கள், இதய நோயாளிகள், இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் அருகில் இருந்தால், மாரடைப்பு, திடீர் இதய முடக்கம் ஏற்பட வய்ப்புள்ளது. 168 டெசிபல் சத்தம் என்பது இரட்டைக் குழல் துப்பாக்கி வெடிக்கும் போது ஏற்படும் சத்தத்தைக் காட்டிலும் அதிகமானது என்பது பலருக்குத் தெரியாது.  இதனால் காது செவித்திறன் பறிபோகும் அபாயமும் உள்ளது என்கிறார் இந்த ஆய்வை நடத்திய விஞ்ஞானி பேராசிரியர் ஹாட்கெட்ஸ். பொது இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெறும் போது முடிந்தவரை பலூன்களை உடைத்து இதுப்போன்ற திடீர் சத்தம் எழுப்பாமல் இருப்பது நமக்கும், நமது அருகில் இருப்பவர்களுக்கும் நல்லது. 

Related Tags

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close