Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கழுத்து வலியை தடுக்கும் 2 நிமிட வொர்க்அவுட்ஸ்...! #PhotoStory

'கழுத்து வலி இருக்கு' எனச் சொன்னாலே.. "கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்யும் பணியா" என டாக்டர் கேட்பார். கம்ப்யூட்டருக்கும் கழுத்துக்கும் என்ன தொடர்பு? சரியான நிலையில் உட்காராததால் வலி வரும். அதுபோல், ஒய்வில்லாமல் வேலைசெய்யும்போதும் கழுத்துவலி வரும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

இந்த வலி வராமல் தடுக்க, பயிற்சிகள் சிலவற்றை  பார்க்கலாம்.

பயிற்சி 1: 

முதுகுத்தண்டு நிமிர்ந்து, கால்கள் பதியும் படி சேரில் அமர வேண்டும். 

கழுத்து வலி பயிற்சி - 1

 

வலது கன்னத்தில் வலது கையை  பதிக்க வேண்டும். இடது பக்கம் மெதுவாக கழுத்தை திருப்பவும். ஐந்து நொடிகளில் பழைய நிலைக்குத் திரும்பலாம்.

கழுத்து வலி பயிற்சி -2

 

இதேபோல, இடது பக்கமும் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கமும் மூன்று முறை வரை செய்யலாம். 

கழுத்து வலி பயிற்சி - 3

 

பயிற்சி 2: 

முதுகுத்தண்டு நிமிர்ந்து, கால்கள் பதியும் படி நாற்காலியில் அமர்ந்து,  இரு கைகளையும் கோத்து கொள்ளவும்.

பயிற்சி - 1

 

கட்டை விரல்களை தாடையின் அடியில்வைக்க வேண்டும்.

பயிற்சி - 2

 

தாடையில் கை வைத்தபடியே கழுத்தை மெதுவாக மேலே தூக்க வேண்டும். பிறகு, பழைய நிலைக்கு வர வேண்டும். 

பயிற்சி - 3

 

இதேபோல, தலையின் பின்னால் கைகளை கோத்து,  கழுத்தை மெல்ல கீழே அழுத்த வேண்டும். இதை, மூன்று முறை செய்யலாம்.

பயிற்சி - 4


பலன்கள்: 

மூளையில் உள்ள நரம்பு செயல்பாடுகள் சீராகும். 

நரம்புகளைத் தூண்டிவிடும். 

மூளைக்கு புத்துணர்வு கிடைக்கும். 

அடிக்கடி வரும் கழுத்துப்பிடிப்பு பிரச்னை சரியாகும். 

கழுத்து வலி வராமல் தடுக்கும்.

மன அழுத்தத்தைச் சரிசெய்யும். 

வேலை செய்யும்போது, தூக்கம் வரும் உணர்வு வருவபர்கள், இந்தப் பயிற்சி செய்திட உற்சாகத்துடன், துடிப்புடன் பணியாற்றலாம்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close