Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூளையைக் காக்கும் எஸ்.டி.ஆர் எனும் ரியல் ஹீரோ!

"வீட்டுல இயல்பா பேசிட்டுத்தான் இருந்தார். நாற்காலியில உட்கார்ந்திட்டு இருந்தவர் திடீர்னு தடுமாறினாரு... எழ முயன்றார் முடியலை. ஏதோ சொல்ல வந்தார். அப்படியே வாய் கோணி, கண்கள் நிலைகுத்திடுச்சு. கையும் காலும் ஒருபக்கமா இழுத்துக்குச்சு... என்ன ஏதுன்னு யோசிக்கிறத்துக்குள்ள பேச்சு மூச்சு இல்லாம ஆயிட்டார். சரி, ஏதாவது பித்த மயக்கமா இருக்கும்னு நினைச்சிட்டோம். ஆனால் கார்ல எடுத்துப்போடும்போது உடல் விரைப்பா இருந்துச்சு.  அப்பதான் ஏதோ விபரீதம்னு தோணுச்சு." தன் அண்ணனுக்கு பக்கவாதம் எனும் ஸ்ட்ரோக் வந்த கதையை வருத்தம் தோய்ந்த முகத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு நண்பர். பாதிக்கப்பட்டவருக்கு வயது ஒன்றும் அதிகம் இல்லை 40தான் இருக்கும். மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் இளம் வயதிலேயே வருகின்றன என்பதற்கு மேலே சொன்ன சம்பவம்தான் சாட்சி. மூளையைத் தாக்கும் பக்கவாதம் பற்றியும், அதைக் கண்டறியும் முறை பற்றியும், நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர், எம்.பாலமுருகன் அவர்களிடம் பேசினோம்...

மூளை

பக்கவாதத்தின் அறிகுறிகள் என்ன?

* திடீரென முகம், கை கால்களில் ஏற்படும் இறுக்கம் அல்லது சோர்வு.

* பேசுவதிலும் சுற்றிலும் நடப்பதைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் குழப்பம். சுயநினைவு பிசகுதல்.

* கண்களில் காணும் காட்சிகள் மூளையில் பதியாமை.

* செயல், நடையில் ஏற்படும் தடுமாற்றம். அமர்ந்து அல்லது படுத்திருக்கும்போது ஏற்படும் நிலைக்குலைவு.

* காரணமற்ற தலைவலி.

இந்த அறிகுறிகள் தோன்றும் முன்பே பக்கவாதம் ஏற்படப்போகும் ஒருவரிடம் தடுமாற்றம் தொடங்கிவிடும். அப்போது எஸ்.டி.ஆர் என்ற ஓர் எளியப் பரிசோதனையைச் செய்வதன் மூலம் பக்கவாதத்தின் பாதிப்பு உள்ளது என்பதைக் கண்டறியலாம்.

மூளை பாதிப்பு

அது என்ன எஸ்.டி.ஆர்?

சின்சினாட்டி ப்ரீஹாஸ்பிடல் ஸ்ட்ரோக் ஸ்கேல் (Cincinnati Prehospital Stroke Scale - CPSS) என்று சொல்வார்கள். அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி நகரின் மருத்துவமனையில் இந்த பக்கவாதம் கண்டறியும் முறை முதன் முதலாக உருவாக்கப்பட்டது. இதன்படி... 

S = SMILE (புன்னகை)

T = TALK (பேச்சு)

R = RAISE BOTH ARMS (கைகளை உயர்த்துதல்) 

ஆகிய செயல்களை பக்கவாதம் வரும் நிலையில் உள்ளவரைச் செய்ய சொல்ல வேண்டும். இயல்நிலை என்றால் நன்றாகப் புன்னகைக்க முடியும். பக்கவாத பாதிப்பு இருந்தால் புன்னகை இயல்பாக இருக்காது. கோணலாக இருக்கும் அல்லது புன்னகைக்க முடியாது.

இயல்பாக உள்ளவருக்கு பேசுவதில் தடுமாற்றம் இருக்காது. சொற்கள் பிசகாது. ஆனால் பக்கவாதப் பாதிப்பு உள்ளவருக்கு, சொற்கள் குழறும். சிலரால் பேச முடியாது.

மேலும், ஆரோக்கியமானவருக்கு இரண்டு கைகளையும் நன்றாக உயர்த்த முடியும். ஆனால் பக்கவாதப் பாதிப்பு உள்ளவரால் ஏதேனும் ஒரு கையை மட்டுமே உயர்த்த இயலும். இன்னொரு கையை உயர்த்த சிரமமாக இருக்கும். சிலரால் உயர்த்தவே முடியாது. 

இந்த அறிகுறிகள் ஒருவரிடம் வெளிப்பட்டால் அவருக்கு பக்கவாத பாதிப்பு உள்ளதென புரிந்துகொள்ளலாம். மேலும், நாக்கை வெளிநீட்டச் சொல்லும்போது அவர் இயல்பாக, நேராக நாக்கை நீட்டினால் பிரச்னை இல்லை. நாக்கை கோணலாக நீட்டினாலோ அல்லது நீட்ட இயலவில்லை என்றாலோ பக்கவாதப் பாதிப்பு உள்ளது என்று பொருள்.

பக்கவாத பாதிப்பு உள்ளவரை ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று, ஸ்கேன் பரிசோதனை செய்தபின், உடனடியாக சிகிச்சை தர வேண்டும். இல்லாவிடில், கோமா நிலைக்குப் போய் மரணம்கூட சம்பவிக்கக்கூடும். எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறோமோ அந்த அளவுக்கு அவரை பாதிப்பில் இருந்தும் மரணத்தில் இருந்தும் காப்பாற்ற இயலும்.

எனவே, உயிர் காக்கும் எஸ்.டி.ஆர் என்ற ரியல் ஹீரோவை மறக்காதீங்க...

- இளங்கோ கிருஷ்ணன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close