Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் 1,850 தரமற்ற மருந்துகள் விற்பனை: மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்!

medicines

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிற மருந்துகளில் 1,850 மருந்துகள் தரமற்றவை எனவும், 13 மருந்துகள் போலி எனவும் மத்திய சுகாதாரத்துறை மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இந்தியாவில் போலி மருந்­து­களின் புழக்­கத்தை கட்­டுப்­ப­டுத்த, மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மருந்துகளின் தரம் மற்றும் போலியான மருந்துகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளுமாறு நொய்டாவில் உள்ள தேசிய பயாலஜிக்கல் மையத்திற்கு (NIB) மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டிருந்தது.

 pib

இதற்காக தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 15 வகையான சிகிச்சை மருந்துகளின் 224 மருந்து மூலக்கூறுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் நாடு முழுவதும் 36 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 650 மாவட்டங்களில் உள்ள சில்லறை மருந்து விற்பனைக் கடைகள், அரசு மருந்தகங்கள் மற்றும் 8 விமான நிலையங்கள், கப்பல் துறை முகாம்களில் இருந்து 47,954 மாதிரி மருந்துகள் சேகரிக்கப்பட்டு தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த ஆய்வில் நாடு முழுவதிலிருந்து 1800 க்கும் மேற்பட்ட  மருந்து ஆய்­வா­ளர்­கள் பங்கேற்றனர். இந்த ஆய்வுப் பணியோடு கணக்கெடுப்பு எடுப்பது தொடர்பாக  அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டிருந்தது.ஆய்வின் முடிவில், 1,850 மருந்துகள் தரமற்றவை எனவும், 13 மாதிரி மருந்துகள் போலியானவை எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்தியாவில் தரமற்ற மருந்துகளின் சதவீதம் 3.16%  என்றும் போலியான மருந்துகள் 0.0245% என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close