Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நோய்களுக்கு நோ' சொல்லும் களிமண் சிகிச்சை... அரசு மருத்துவமனையின் அசத்தல் ஹெல்த் பார்லர்..!

பொதுவாகவே மருத்துவமனை என்றாலே மருந்து, மாத்திரை, ஊசிகள்... கூடவே கொஞ்சம் புரியாத மருத்துவ வார்த்தைகள்தான் நம் நினைவில் வரும். ஆனால் இவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டு நிற்கிறது அரும்பாக்கம் அரசு அண்ணா மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு. 

களிமண் சிகிச்சை

லேசாக தலைவலித்தாலே அலோபதி டாக்டரைப் பார்த்து அவர் கொடுக்கும் மருந்தை வாங்கிச் சாப்பிட்டால்தான் பிரச்னை தீரும் என்ற மனநிலையில் உள்ள சூழலில் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் தீர்வு தருமா? என்ற கேள்வியை மருத்துவமனையின் இயற்கை மருத்துவ பிரிவைச் சேர்ந்த டாக்டர் தீபாவின் முன்வைத்தபோது அவர் கூறியதாவது...டாக்டர் தீபா

``தலைவலி என்றில்லை... எந்த ஒரு பிரச்னைக்காகவும் இங்கே வருபவர்களிடம், உடனடியாக அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து, மாத்திரைகளை நிறுத்தச்சொல்லி அறிவுறுத்தமாட்டோம். நாடி பார்த்து அதற்கேற்பவே சிகிச்சை அளிப்போம். அந்தச் சிகிச்சை எந்தமாதிரியாக பலனளிக்கிறது என்பதைப் பொறுத்தே அவர்கள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் அளவைக் குறைக்கச் செய்வோம். சாதாரணமாக வெளிப்புற நோயாளிகளுக்கு இந்தமுறையைத்தான் பின்பற்றுகிறோம். அதேநேரத்தில், உள் நோயாளிகளுக்கு நோயின் வீரியத் தன்மைக்கு ஏற்ப சற்று கூடுதல் கவனத்துடன் இதனைத் தொடர்கிறோம்'' என்றவர் சிகிச்சைமுறை பற்றியும் பேசினார்.

``காய்கறி, பழங்கள், உணவுமுறையில் மாற்றம், அக்குபஞ்சர், யோகா, களிமண் சிகிச்சை, வாழை இலைக் குளியல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை முறைகளுடன் முழுமையான தீர்வு தருகிறது எங்களது மருத்துவம். அதேநேரத்தில், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மனஅழுத்தம், மலச்சிக்கல் போன்ற சில நாள்பட்ட நோய்களுக்கெல்லாம்கூட உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

களிமண் சிகிச்சை

பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் வருகின்றன. குறிப்பாக, சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். அவர்களில் பெரும்பாலும் வேலைக்குச் செல்பவர்களாகவும், கல்லூரி செல்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே இவர்களெல்லாம் பிரச்னைக்கு மாத்திரை மட்டுமே தீர்வு என்று முடிவு செய்து அவசர அவசரமாக மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள். இதை பெண்தொடர்ந்து சாப்பிடுவதால் பக்கவிளைவுகள் உண்டு என்பதால், அவர்களுக்கு இயற்கை வழியிலேயே சரிசெய்ய வழிகாட்டுகிறோம். வார இறுதி நாட்களை அவர்களுக்கென்று ஒதுக்கி, யோகா மற்றும் உணவு முறையில் மாற்றம் கொண்டு வர சிகிச்சைகளைத் தருகிறோம்.
மற்றபடி, சிறுவயதிலேயே இயந்திர வாழ்க்கைக்குள் தங்களைப் பழக்கப்படுத்தி வரும் குழந்தைகளுக்கு உணவுமுறையை மாற்றவும் வழிகாட்டி வருகிறோம். அவர்களுக்கு இங்கு அளிக்கப்படும் சிகிச்சையின் முடிவில் நிச்சயம் பழங்கள், காய்கறிகளைச் சாப்பிட அவர்கள் மறுக்கமாட்டார்கள்” என்று நம்பிக்கை வார்த்தை சொன்ன டாக்டர் தீபா ஒரு சுவாரஸ்யத் தகவலையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

பெண்கள்... திருமண நேரம் நெருங்கிவிட்டாலே பியூட்டி பார்லர் போக ஆர்வமாக இருப்பார்கள். அதைத் தவிர்த்து எங்களைத்தேடி வருகிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? அழகுபடுத்திக்கொள்ள மருத்துவமனையா என்று உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். உடலில் தேவையற்ற நச்சுக்களை அகற்றி இயல்பாகவே அவர்கள் முகத்தை பொலிவூட்ட இங்கே சிகிச்சை எடுத்துக்கொள்ள வருகிறார்கள். இதுதவிர திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை பற்றிய மருத்துவ ஆலோசனையும் அவர்களுக்குத் தரப்படுகிறது. இங்கு பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் கூட சிகிச்சைக்கு வரலாம்” என்றார்.

இறுதியில், இயற்கையைத்தான் நாம் சார்ந்திருக்க வேண்டியுள்ளது என்பது எத்தனை உண்மை!

- ஐஷ்வர்யா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close