Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கும் பெண்ணா நீங்கள்?

இல்லத்தரசிகள், பணிக்குச் செல்பவர்கள் என அனைத்து தரப்பு பெண்களையும் ஸ்ட்ரெஸ் விட்டு வைப்பதில்லை. இந்நிலையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ளும் பெண்கள் ஸ்ட்ரெஸில் இருந்து தப்பிக்கலாம் என 'British Medical Journal Open' நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெண்களின் ஸ்டிரெஸ்

அதன்படி, ஒரு நாளைக்கு ஏழு முறை பழம், காய்கறிகள் சாப்பிடுபவர்களுக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு 23 சதவிகிதம் வரை குறைவு என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 60,000 பெண்களுக்கு நடத்தப்பட்டது.

தினசரி ஐந்து முதல் ஏழு வரை பழம், காய்கறி சாப்பிடும் பெண்களுக்கு ஸ்ட்ரெஸ், மனச்சோர்வு போன்றவை பாதிப்பு குறைவு என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆண்களை விட பெண்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close