Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெற்றோர்கள் கவனத்திற்கு.. இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!!

தமிழகத்தில் 43,051 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. ஏப்ரல் 2-ம் தேதி மற்றும் ஏப்ரல் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவிருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. 

Polio vaccination camp
 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

*தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் முதல் தவணை ஏப்ரல் 2ம் தேதியும், இரண்டாம் தவணை ஏப்ரல் 30-ந்தேதியும் நடைபெற உள்ளது. 

*பிறந்த குழந்தைகள் முதல் 5 வயது வரை சொட்டுமருந்துக் கொடுக்க வேண்டும்.

*சொட்டு மருந்து மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்ப்படும்.

* தேசிய சொட்டு மருந்து அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.

*புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

*இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழக்கப்படும். 

* 1,000 நடமாடும் குழுக்கள்  மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
மதுரையில் இன்று காலை 7.30 மணிக்கு கோ.புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது. மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர்.

madurai vaccination camp

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close