Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுற்றுலா குழந்தைக்குள் என்னவெல்லாம் அற்புதம் நிகழ்த்தும் தெரியுமா?

சுற்றுலா


ம் குழந்தைகளின் 12 ஆண்டுகள் எப்படிச் செல்கிறது? மனதைத் தொட்டு சொல்லுங்கள் பார்ப்போம். பள்ளிக்குள் காலடி வைக்கும் வரைதான் கதை, விளையாட்டு எல்லாம். அட்மிஷன் போட்டுவிட்டால் அவ்ளோ தான். கே.ஜி. வகுப்புகளைத் தாண்டி விட்டால்... அலறியடித்து எழுந்து பரபரப்பாய் பல் தேய்த்து பள்ளி வந்து...படி படி என படித்து..பின் மாலையில் புத்தகப் பையோடு வீடு வந்து...டியூசன் சென்று...மறுபடியும் வீட்டில் ஹோம் வொர்க் செய்து...விடுமுறை நாளில் ஸ்பெஷல் கிளாஸ் போய்...தேர்வு விடுமுறைகளில் கிரியேட்டிவ் கிளாசில் படாதபாடு பட்டு...பப்ளிக் எக்சாமுக்காக ஒன்பதாம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை யோகி வாழ்க்கை வாழ்கின்றனர்.  இதில் படிப்பதற்கான பயணங்கள் மட்டுமே. உறவினர் வீட்டுக்குச் செல்வது, சுற்றுலா செல்வதெல்லாம் எப்போதாவது தான். பள்ளிக் காலத்தையே அவர்களின் சோதனைக்காலமாக மாற்றி வைத்திருக்கிறோம். இவ்வளவு இறுக்கமான மனநிலையில் குழந்தைகள் எப்படி மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ள முடியும். பயணத்திலும், புதிய இடங்களிலும் குழந்தைகள் நிறைய கற்றுக் கொள்கிறார்கள். சுற்றுலாக்கள் நம் குழந்தைகளுக்குள் நிகழ்த்தும் அற்புதங்களைத் தெரிந்து கொள்வோமா? 


* பயணம் செல்லப் போகிறோம் என்ற எண்ணமே உங்கள் குழந்தைக்கு ஸ்வீட்டான விஷயம் தான். செல்லும் இடத்தில் உங்கள் குழந்தைகள் எதிர்பார்ப்பு என்ன என்று பேசி பார்க்க வேண்டிய இடங்களை திட்டமிடுங்கள். தேவையானவை என்ன என்று குழந்தைகளோடு அமர்ந்து செக் லிஸ்ட் போடுங்கள். அவர்களுக்கான பொருட்களை அவர்களே தேர்வு செய்யட்டும். எந்த விஷயத்தையும் திட்டமிட்டு தொடங்க வேண்டும் என்பதை இப்படித்தான் கற்றுக் கொள்கின்றனர். 

* பயணத்தில் உங்கள் குழந்தைகள் தனக்கு பிடித்ததை உங்களுடன் மனம் திறந்து பேசுவார்கள். உங்களது சிறு வயது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் சரியான தருணம். இருவருக்குள்ளுமான அன்பின் பிணைப்பை இறுகச் செய்யும். 

* பார்க்கும் இடங்கள், பயணிக்கும் வாகனங்கள் என குழந்தைகள் தங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எல்லா விஷயங்களையும் கேள்விகளாகத் தொடுப்பார்கள். பெற்றோர் தங்களது கூகுள் நண்பனின் உதவியோடும், அனுபவ அறிவின் வழியாகவும் சரியான பதில்களைச் சொல்லுங்கள்..நாம் வாழும் பூமியைப் பற்றிய வரலாற்றினை சுற்றுலாக்களில் குழந்தைகள் தெரிந்து கொள்கின்றனர். இவ்வளவு சிறப்பு மிக்க நாட்டில் பிறந்திருக்கிறேனா என்று உணரும் போது சுய மதிப்பீடு உயரும். 

* சுற்றுலாவில் குழந்தைகள் கற்பனையில் தேக்கி வைத்திருக்கும் விஷயங்களை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. மயில், சிங்கம், புலி, மான் என்று புத்தகத்தில் படித்தவற்றை நேரில் பார்க்கும் போது அவர்களது புரிதல் மேலும் மேம்படும். 

* போகும் இடங்களில் உள்ள மார்க்கெட்டில் குழந்தைகளோடு உலவுங்கள். அந்த ஊரில் கிடைக்கும் பொருட்கள், விலை, கலாச்சாரம், உணவு வகைகள் என்று அந்த ஊர் மக்களின் விருப்பங்களையும் தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும். குழந்தைகளின் சிந்னையை விரிவாக்கும். 

* குறிப்பிட்ட ஊரில் பழமையான மக்கள் வாழும் பகுதிகளை பார்வையிடுங்கள். அவர்களது மொழி மற்றும் பழக்கங்களை புரிந்து கொள்வார்கள். அவர்களது நிலையில் தன்னை நிறுத்திப் பார்க்கும் வாய்ப்பு குழந்தைகளுக்கு கிடைக்கும். சூழலோடு தங்களை பொறுத்திக் கொண்டு வாழ பழகிக் கொள்வார்கள். 

* பயணம் குழந்தைகளுக்குள் ஊர்சுற்றும் ஆர்வத்தை உருவாக்கும். புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதற்கான தேடலையும் தூண்டும். இது குழந்தைகளின் மற்ற விஷயங்களிலும் பிரதிபலிக்கும். தனக்கு இனக்கமாவர்கள் மற்றும் தன்னிடம் இருந்து வேறுபட்டவர்கள் என்று மனிதர்களை புரிந்து கொள்ளவும் பழகுகின்றனர். 

* சிறு வயது குழந்தைகள் போகும் இடங்களில் பார்க்கும் விஷயங்களை மிகுந்த ஆர்வத்துடன் ரசிக்கின்றனர். அழகிய விஷயங்களால் கவரப்படும் போது சந்தோஷத்தை அடைகின்றனர். மலை ஏறுதல் போன்ற சாகச விஷயங்கள் அவர்களுக்கு புதிய அனுபவங்களைத் தருகிறது. இதனால் குழந்தைகள் மனம் புத்துணர்ச்சி அடைகிறது. தன்னை சுயமதிப்பீடு செய்து கொள்ள குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. 

* சுற்றுலா பயணத்தின் போது உங்களது குழந்தைகளுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புள்ளது. பாடுவது, டான்ஸ் ஆடுவது என கலக்குவார்கள். அவர்களுக்குள் உள்ள நகைச்சுவை உணர்வு வெளிப்படும். சிக்கலான நேரங்களில் குழந்தைகள் எளிய தீர்வு சொல்லி ஆச்சரியப்பட வைப்பார்கள். குழந்தைகளுக்குள் உறைந்து கிடக்கும் திறன்கள் பயணத்தில் வெளிப்படலாம். 

* பயணங்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் இனிய நினைவுகளாய் மாறி மனதையும் ஆல்பத்தையும் அலங்கரிக்கும். ஒரு சுற்றுலா குழந்தைகளின் கேரக்டரையே மாற்றும் அளவுக்கு வலிமையானது. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் சுற்றுலாக்கள் அவர்கள் மனதில் உருவாக்கும். 

-யாழ் ஸ்ரீதேவி  
 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close