Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செல்போன் எண் மூலம் உங்கள் வயதை அறியலாமா..?! #BrainTeasers

செல்ஃபோன் எண்மூலம் உங்கள் வயதை அறியலாமா..?

காலையில் கண் விழித்து, காலைக் கடன்களை முடித்ததும் காபி, பேப்பரில் ஒரு மேய்ச்சல் பார்வை. பிறகு, சமையலில் மனைவிக்கு உதவி. பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல அவர்களை ஆயத்தப்படுத்தி, அவசர அவசரமாகக் கொண்டுபோய் விடுகிறோம்.  அங்கிருந்து அப்படியே நம் அன்றாடப் பணியைத் தொடரக் கிளம்பிவிடுகிறோம்.  வேலை, மீட்டிங், மாதாந்திர இலக்கை நோக்கிய ஓட்டம்... ஓட்டம்... என ஓடிக்கொண்டே இருக்கிறோம். இன்றைய அவசர உலகில், நாம் நிற்கும் இடத்தில் நிற்க வேண்டுமென்றாலே, நாம் ஓட வேண்டி இருக்கிறது. உலகம் அரக்கபரக்க ஓடுகிறது. அதோடு சேர்ந்து  நாம் ஓடுகிறோம். சற்று இளைபாற நேரம் கிடைத்தால் ஏதாவது எழுதுகிறோம். படிக்கிறோம் விளையாடுகிறோம். ஏதாவது மனதுக்குப் பிடித்ததைச் செய்கிறோம்.

செல்ஃபோன்

நெடுங்கதைகள் அலுத்துப்போனதால் அல்ல நேரமில்லாததால்தான் சிறுகதைகளை வாசிக்கிறோம். அதற்கும் நேரம் இல்லாமல் போகவே, ஒரு பக்கக் கதைகள் என வாசிக்கிறோம். ஏதோ ஒரு சின்ன வாசகம் ஒரு சின்ன ஜோக் ஒரு சிறு குறுந்தகவல் நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறது. நம் வேலைப்பளுவில் அன்றாடம் ஏற்படும் மன இறுக்கத்தை, மன அழுத்தத்தை - ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் ஆகிய இரண்டு சோஷியல் மீடியாக்களும் நிச்சயம் குறைக்கவே செய்கின்றன. கை செல்ஃபோனாகவும், கால் டூவீலராகவும் மாறிப்போய்விட்டது.

விளையாட்டு

வாட்ஸ்-அப்பில் அவ்வப்போது வரும் தத்துவங்கள், மருத்துவக் குறிப்புகள், சமையல் குறிப்புகள், ஜோதிடத் தகவல்களை நம்மையும் அறியாமல் வாசிக்கத் தொடங்கி விடுகிறோம். பள்ளிக்கூட குழந்தைகளாக இருந்தபோது, விளையாட்டு வகுப்புகளிலும், உணவு இடைவேளைகளிலும் விடுகதைகள், க்விஸ், புதிர் கணக்குகள் போன்றவற்றைப் போட்டு மகிழ்வது வழக்கம். அப்படிப்பட்ட விடுகதைகளும் புதிர் கணக்குகளும்கூட இப்போது அடிக்கடி வாட்ஸ்-அப்பில் வலம் வரத் தொடங்கிவிட்டன.
 
அப்படி ஒரு புதிர்க் கணக்கு இப்போது வாட்ஸ்-அப்பில் வைரலாகி வருகிறது. உங்கள் செல்போன் எண்ணின் கடைசி எண்ணை வைத்து, உங்கள் வயதைச்  சொல்லும் புதிர்க் கணக்கு இது. மூளைக்கான பயிற்சியும்கூட. வேலைப் பளு, மனஅழுத்தம் போன்ற விஷயங்களிலிருந்து விடுபட மூளைக்கு வேலை கொடுங்கள். அது உங்களை உற்சாகமாக மாற்றும். சிறு பிள்ளையைப் போல மனதை இலகுவாக்கும்.

நண்பர்கள்

இந்த விளையாட்டை விளையாடிப் பாருங்கள்... 
அதிசயம், ஆனால் உண்மை... 
நம்முடைய செல்போன் எண்ணை வைத்து, நம்முடைய வயதைக் கணிக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.
உங்கள் செல்ஃபோனின் கால்குலேட்டரை ஆன் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டெப்-1: உங்கள் செல்போன் எண்ணின் கடைசி எண்ணை 2 ஆல் பெருக்குங்கள்.


ஸ்டெப்-2: பெருக்கியதும் வரும் எண்ணுடன் 5-ஐ சேர்த்துக்கூட்டுங்கள். கூட்டிவிட்டீர்களா?


ஸ்டெப்-3: இப்போது கிடைக்கும்  எண்ணை  50ஆல் பெருக்குங்கள். பெருக்கி முடித்ததும் என்ன தொகை வருகிறதெனப் பாருங்கள்.


ஸ்டெப்-4: வரும் எண்ணுடன் 1,767 சேர்த்துக் கூட்டுங்கள்

.
ஸ்டெப்-5: இத்துடன் நீங்கள் எந்த வருடம் பிறந்தீர்களோ அந்த வருடத்தை வைத்துக் கழிக்கவும்.
இப்போது மூன்று டிஜிட்டில் வரும் முதல் எண், உங்கள் செல்ஃபோனின் கடைசி எண் ஆகும். மற்ற இரண்டு எண்கள்தான் உங்கள் வயது... 
எப்...பூடி???

- எஸ்.கதிரேசன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close