Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்களிடம் இந்த ஆரோக்கியப் பழக்கங்கள் இருக்கின்றனவா? #VikatanSurveyResults

பருவத்துக்கு ஏற்றாற்போல் நோய்களும் மருந்துகளும் மாறுகின்றன. அதற்கு ஒரே தீர்வு... நம்முடைய ஆரோக்கியப் பழக்கங்கள். முன்னேச்சரிக்கை, தடுப்பு வழி என்று எல்லாமுமாக இருப்பதும் இவைதான்.  இது தொடர்பாக ஒரு மினி சர்வே விகடன் தளத்தில் நடத்தப்பட்டது. `உங்களிடம் இந்த ஆரோக்கியப் பழக்கங்கள் இருக்கின்றனவா? #VikatanSurvey' என்பது அதன் தலைப்பு. அதன் முடிவுகள் இங்கே... 

ஆரோக்கியப் பழக்கங்கள்


`தினமும் எவ்வளவு தண்ணீர் குடிப்பீர்கள்?’ என்று கேட்டிருந்தோம். அதற்கு `2-3 லிட்டர்’தண்ணீர் குடிப்போம்’ என்கிறார்கள் 55.2% பேர். `நாங்கள் குடிக்கும் அளவு தெரியாது’ என்கின்றனர் 23.1% பேர்.  21.6% பேர், 2 லிட்டருக்கும் குறைவாக தண்ணீர் குடிப்பதாக கூறியுள்ளனர். 

தினமும் எவ்வளவு தண்ணீர் குடிப்பீர்கள்

`சாப்பிடுவதற்கு முன்னர் கை கழுவும் பழக்கம் உண்டா?’ என்ற கேள்விக்கு `உண்டு’ என்கின்றனர் 88.7% பேர். `எப்போதாவது’ என்று யதார்த்தமாகச் சொல்கிறார்கள் 8.5% பேர். `இல்லை’ என்கிறார்கள் 2.8% பேர். 

சாப்பிடுவதற்கு முன்னர் கை கழுவும் பழக்கம் உண்டா

`வாரம் ஒரு முறை நகம் வெட்டுவீர்களா?’ என்று கேட்டிருந்தோம். `ஆம்’ என்கின்றனர் 56% பேர். `தோன்றும்போது’ என்கின்றனர் 28.9% பேர். `இல்லை’ என்கின்றனர் 15.1% பேர்.

வாரம் ஒரு முறை நகம் வெட்டுவீர்களா

`காலையில் காபி/டீ குடிப்பதற்கு முன்னதாகப் பல் துலக்குவீர்களா?’ என்ற கேள்விக்கு `ஆம்’ என்று கைதூக்குகிறார்கள் 78.5% பேர். `இல்லை’ என்கிறார்கள் 16.6% பேர். `எப்போதாவது’ என்று கைதூக்கியும் தூக்காமலும் இருக்கிறார்கள் 4.9% பேர். 

காலையில் காபி/டீ குடிப்பதற்கு முன்னதாகப் பல் துலக்குவீர்களா

`தினமும் காலை உணவைத் தவிர்ப்பீர்களா?’ என்று கேட்டிருந்தோம். 67.6% பேர் 'இல்லை' என்றும், 24% பேர் 'நேரமின்மையின்போது மட்டும்' என்றும், 8.4% பேர் ஆம் என்றும் கூறியுள்ளனர்.

தினமும் காலை உணவைத் தவிர்ப்பீர்களா

`தினமும் உடற்பயிற்சி செய்வீர்களா?’ என்று கேட்டிருந்தோம். `இல்லை’ என்கின்றனர் 53.5% பேர். `நேரம் கிடைக்கும்போது உடற்பயிற்சி செய்வோம்’ என்று 28.4% பேர் சொல்கிறார்கள். 18.1% பேர் `இல்லை’ என்கின்றனர். 

தினமும் உடற்பயிற்சி செய்வீர்களா

`தினமும் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னதாகவே திட்டமிடும் பழக்கம் உண்டா?’ என்ற கேள்விக்கு `உண்டு’ என்று 45% பேர் கைகளை உயர்த்தியுள்ளனர். `எப்போதாவது’ என்று யதார்த்தத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் 28.6% பேர். `இல்லை’ என்று கூறியுள்ளனர் 26.4% பேர்.

தினமும் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னதாகவே திட்டமிடும் பழக்கம் உண்டா

`இசை கேட்கும் பழக்கம் உண்டா?’ என்று கேட்டிருந்தோம். `ஆம்’ என்று தலையசைக்கிறார்கள் 65.4% பேர். `தோன்றும்போது’ என்கின்றனர் 26.6% பேர். `இல்லை’ என்கிறார்கள் 8% பேர்.

இசை கேட்கும் பழக்கம் உண்டா

`தினமும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டா?’ என்ற கேள்விக்கு `தோன்றும்போது’ என்று 38.9% பேரும், `உண்டு’ என்று 35.3% பேரும், `இல்லை’ என்று 25.8% பேரும் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

தினமும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டா

`தினமும் நீங்கள் உறங்கும் நேரம் எவ்வளவு?’ என்று கேட்டிருந்தோம். 76.9% பேர் `6-8 மணி நேரம் உறங்குகிறோம்’ என்று தேர்ந்தெடுத்துள்ளனர். 22.2% பேர் '4-6 மணி நேரம்' என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 0.9% பேர் '4 மணி நேரத்துக்கும் குறைவாக' என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 

தினமும் நீங்கள் உறங்கும் நேரம் எவ்வளவு

- ச.மோகனப்பிரியா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close