Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உடனடியாக சமைக்க 5 ஈஸி, ஹெல்த்தி காலை உணவுகள்..! #5MinsFood

காலை உணவை மறந்தால், மெள்ள மெள்ள நம் ஆரோக்கியத்தையும் மறக்க வேண்டியதுதான். இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான் என்றாலும், ரொம்பவும் பிஸியான வாழ்க்கையில் இதைக் கடைப்பிடிப்பது, சற்று கடினமாகத்தான் உள்ளது என்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அப்படிப்பட்ட 'பிஸி' மக்களுக்காகவே  ஹெல்த்தியான அதேநேரத்தில் உடனடியாக சமைக்கக்கூடிய உணவுகளைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணரான ஷைனியிடம் கேட்டோம்.

காலை உணவுகள் 

 

முன்பு இருந்ததைவிட இப்போது பெரும்பாலான மக்கள் காலை உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். ஆனால், காலை 9 ஊட்டச்சத்து நிபுணர் ஷைனிமணிக்கு மேல் சாப்பிடுவது, நூடுல்ஸ், பிரெட் , எண்ணெயில் பொரித்த ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இது முற்றிலும் தவறாகும். 

காலை உணவை 8.50 மணிக்கு முன்பாகவே சாப்பிட்டு விட வேண்டும்.  அதேநேரத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்.  

ரெசுபி 

ஹெல்த்தி பிரேக்பாஸ்ட்  #1: கூல் பழக்கலவை

தேவையானவை:

ஊறவைத்த சப்ஜா விதைகள் : ஒரு சிறிய கப்
கோடை காலத்தில் கிடைக்கும் மா, பலா, தர்பூசணி, கிர்ணிப் பழம் : ஒன்று ( இவற்றில் ஏதேனும் ஒன்று)
பூசணி விதைகள் : ஒரு டீஸ்பூன்
சூரியகாந்தி விதைகள் : ஒரு டீஸ்பூன்
ஆளிவிதைப் பொடி : ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப்பால் / தயிர் - 1/2 கப்

செய்முறை :

இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடலாம்.
* ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து பின்பு சாப்பிட்டால், மேலும் சுவையாக இருக்கும்.

பலன்கள் :

வெயில் காலத்துக்கு மிகவும் ஏற்றது. உடலைக் குளுமையாக வைத்திருக்கும். அத்துடன்  உடல் வறட்சியிலிருந்தும் பாதுகாக்கும். 
சப்ஜா விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளதால், உடனடி ஆற்றலைத் தருகின்றது. ரிலாக்ஸ்சான மனநிலையை உண்டாக்கும். எலும்புகளுக்கும் வலுசேர்க்கின்றது. 

நல்லக் கொழுப்பு நிறைந்த தேங்காய்பால் உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. ஆளிவிதைப் பொடியில் ஹார்மோன் குறைபாடு காரணமாக ஏற்படக்கூடிய உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வு மற்றும் மனஉளைச்சலை குறைக்க கூடியது.
எளிதில் ஜீரணமாகக்கூடியது என்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதைச் சாப்பிடலாம்.

கிரீன் ஸ்மூத்தீஸ்



ஹெல்த்தி பிரேக்பாஸ்ட் #2: கிரீன் ஸ்மூத்தீஸ்

தேவையானவை :

ஆப்பிள் :  1/2 கப்
பேரிக்காய் : 1/2 கப்
மாதுளை : 1/2 கப்
தக்காளி : 1/2 கப்
தேன் : 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு : 2 டீஸ்பூன்
புதினா : ஒரு கைப்பிடி அளவு
கீரை (ஏதேனும் ஒரு வகை): ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லி : ஒரு கைப்பிடி அளவு

செய்முறை :

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, ஜுஸாக்கிக் குடிக்கலாம்.

பலன்கள் :

இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளதால் கூந்தலுக்கும் சருமத்துக்கும் சிறந்தப் பலனை அளிக்கிறது. பொதுவாக, இரும்புச்சத்துக்கள் நிறைந்த கீரை, மாதுளை போன்ற உணவுகளுடன், வைட்டமின் - சி நிறைந்த தக்காளி, எலுமிச்சைச்சாறு போன்ற உணவுகளைச் சேர்த்து சாப்பிட வேண்டும். இதனால் அதிக அளவிலான இரும்புச்சத்துக்கள் உடலுக்குக் கிடைக்கிறது.

இந்த ஸ்மூத்தீஸ் பார்வையை மேம்படுத்தும். புற்றுநோய் வராமல் தடுக்கும். உடல் எடையை அதிகரிக்காமல் பாதுகாக்கும்.
வயிற்று வலி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், போன்றவற்றைச் சரி செய்கிறது. வயோதிகத்தை தள்ளிப்போடும் ஆற்றலும் இதற்கு உண்டு.

ஸ்மூத்திஸ் 

ஹெல்த்தி பிரேக்பாஸ்ட்  #3: ஃப்ரூட்ஸ் ஸ்மூத்திஸ்

தேவையானவை :

பாதாம் பால் : 100 மில்லி
ஆப்பிள் : ஒன்று
பேரிக்காய் : ஒன்று
வாழைப்பழம் : ஒன்று
பூசணி விதை : ஒரு டீஸ்பூன்

செய்முறை :

பழங்களில் உள்ள தோல்களை நீக்கி, பூசணி விதையையும் பாதாம் பாலையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து ஸ்மூத்தீயாகக் குடிக்கலாம்.

பலன்கள் :
காலை உணவுகளில் இருக்கவேண்டிய அத்தனைச் சத்துக்களும் நிறைந்துள்ளன. நார்ச்சத்து முதல் நுண்ணிய ஊட்டச்சத்துக்கள் வரை இதில் உள்ளன. பாதாம், ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்கச் செய்கிறது. நினைவாற்றலை மேம்படுத்தும்.

இந்த ஸ்மூத்தீஸ் இன்சுலின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் சர்க்கரை நோயாளிகளும் இதனைப் பருகலாம்.
நார்ச்சத்து, வைட்டமின்- சி, பீட்டா கரோட்டீன், லுட்டின் நிறைந்த இந்த ஸ்மூத்தீஸ் வாய்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றைக் குணப்படுத்துவதுடன் உடல் வளர்ச்சிக்கும் துணைப்புரிகின்றது.

சிறுதானியங்கள் 


ஹெல்த்தி பிரேக்பாஸ்ட்  #4: சிறுதானியக் கஞ்சி

தேவையானவை :

ராகி மாவு/ சோள மாவு : 2டீஸ்பூன்
தண்ணீர் : 200 மிலி
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
500 மிலி தண்ணீரைக் நன்றாகக் கொதிக்கவிடவும்.
1/2 கப் தண்ணீரில் கலக்கிய ராகி/ சோளம் மாவை, கொதிக்கும் மாவுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
மாவு கெட்டியாகாமல், கஞ்சிப்பதம் வந்ததும் இறக்கி, தேவையான அளவு உப்பைச் சேர்த்துக் குடிக்கலாம்.

பலன்கள் :

கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்தது.
செரிமானக் கோளாறுகளை நீக்கும்.
இந்தக் கஞ்சியுடன், ஏதேனும் ஒரு பழத்தையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.

ஹெல்த்தி பிரேக்பாஸ்ட்  #5: சப்ஜா விதைகள் புட்டிங்

தேவையானவை :
ஊறவைத்த சப்ஜா விதைகள் : 1/4 கப்
தேங்காய்ப்பால் : ஒரு கப்
தேன் : ஒரு டீஸ்பூன்
ஆப்பிள் : 1/4 கப்
பேரிக்காய் : 1/4 கப்
வால்நட் : ஒரு டீஸ்பூன்

செய்முறை :
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடலாம்.

பலன்கள் :
ஆன்ட்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் நல்லக் கொழுப்புகள் நிறைந்துள்ளன.
உடனடி ஆற்றலைத் தரும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
இதய நோய், சர்க்கரை நோயைத் தடுக்கவும் வால்நட் மிகவும் பயன்படுகிறது. அத்துடன் மனஅழுத்ததைக் குறைத்து உற்சாகத்தைத் தருகின்றது. சருமத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகின்றது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close