Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூவத்தூராக மாறிய புதுச்சேரி! - என்னென்ன வசதிகள் இருக்கிறது தெரியுமா?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியும் இணைந்தது தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மனு அளித்தனர். தொடர்ந்து முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் எதிரணியினர் வளைத்துவிடக் கூடாது என்பதற்காக, கூவத்தூர் பாணியில் புதுச்சேரியில் தனியார் பீச் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.

விண்ட் ஃபிளவர் ரிசார்ட்

புதுச்சேரி-கடலூர் சாலையில் அரியாங்குப்பத்தை அடுத்த சின்ன வீராம்பட்டினம் கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ளது "விண்ட் ஃப்ளவர்” தனியார் பீச் ரிசார்ட். இதில் தனி நீச்சல் குளங்களுடன் கூடிய ஐந்து சொகுசு அறைகளும், 46 தனியறைகளும் இருக்கின்றன. ரூபாய் 5 ஆயிரத்திலிருந்து 7 ஆயிரம் வரை இந்த அறைகளுக்கு வாடகை.

விண்ட் ஃபிளவர் ரிசார்ட்

இதுதவிர விடுதிக்குள் பிரதானமான நீச்சல் குளம், விளையாட்டுப் பூங்கா, ரிசார்ட்டின் பின்புறம் படகு சவாரி செய்வதற்கான வசதிகளும் இருக்கின்றன. விழுப்புரம் அரசியல் புள்ளி ஒருவரால் மொத்தம் 19 அறைகள் புக் செய்யப்பட்டு இருக்கின்றன. இன்றும் (22.8.2017), நாளையும் (23.8.2017) இரண்டு தினங்களுக்கு மட்டுமே அறைகள் புக் செய்யப்பட்டுள்ளன. தற்போது வரை, பெரம்பூர் எம்.எல்.ஏ. வெற்றிவேலைத் தவிர தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close