Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம்!

த்தரகாண்ட் மாநிலத்தில், ஷமோலி மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின.

நிலநடுக்கம்

உத்தரகாண்ட் மாநிலம் ஷமோலி மாவட்டத்தில், நேற்று இரவு 9 மணியளவில், ஜோஸ்மத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  நிலநடுக்கம் உணரப்பட்டது.  ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. கட்டடங்கள் குலுங்கியதால், அங்குள்ள பொதுமக்கள் பீதியுடன் வீடுகளிலிருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். சிறிய அளவிலான நிலநடுக்கம் என்பதால், உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ இல்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதே பகுதியில், கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 5.8 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது. அன்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கம், டெல்லி மற்றும் வடமாநிலங்களின் பிற பகுதிகளிலும் உணரப்பட்டது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close