Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்சவரம்பு உயர்வு!

மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு பெறுவதற்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்சவரம்பு (கிரீமிலேயர்) ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது. 

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி


இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ’ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரையில் வருமானம் ஈட்டும் ஓ.பி.சி (OBC) எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் மத்திய அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைப் பெறலாம். மேலும், ஓ.பி.சி. பிரிவின் கீழ் உட்பிரிவுகளை ஏற்படுத்த ஆணையம் ஒன்றும் அமைக்கப்படும். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் கடந்த 2011-ம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அமைக்கப்பட உள்ளன. அதேபோல், நாடாளுமன்ற நிலைக்குழுவும் இதே பரிந்துரையை கடந்த 2012-2013-ம் ஆண்டில் அளித்தது. மாநில அளவிலான இடஒதுக்கீட்டு முறைக்கு இந்த நடைமுறை தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் 9 மாநிலங்களில் அமலில் உள்ளது’ என்று அவர் தெரிவித்தார். இதர பிற்படுத்தப்பட்டவர்களின் வசதி படைத்தவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பெறுவதைத் தடுக்கும் வகையில் கிரீமிலேயர் என்ற வருமான உச்சவரம்பு உள்ளது. இந்த உச்சவரம்பை உயர்த்துவது என மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close