Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2 ஜி வழக்கில் செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு! சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் அறிவிப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு, வரும் செப்டம்பர் மாதம் 20-ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜா

2007-ல், மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்ற பிறகு, 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில், 2008-ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை விற்கப்பட்டது. அதில், பெருமளவு முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டதாக மத்திய கணக்காயம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ 2009-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து வழக்கு விசாரணையைத் தொடங்கியது. இதையடுத்து, 2010-ம் ஆண்டு நவம்பரில் ஆ.ராசா மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டு, பல மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கை விசாரிக்க சி.பி.ஐ தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, ஓ.பி.ஷைனி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆ.ராசா, தி.மு.க எம்.பி கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது. இவர்கள் மீது மூன்று வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டன. அதில், இரண்டை சி.பி.ஐ-யும், ஒன்றை அமலாக்கப் பிரிவும் தாக்கல்செய்தது.

இந்த வழக்கின் இறுதி வாதம் முடிந்ததையடுத்து, தற்போது தீர்ப்புகுறித்த அறிவிப்பை நீதிபதி ஓ.பி.ஷைனி இன்று வெளியிட்டுள்ளார்.  '2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் செப்டம்பர் மாதம் 20-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும். தீர்ப்பு வழங்க கால அவகாசம் தேவைப்படுவதால் இந்தக் கால தாமதம் ஏற்பட்டது' என்று தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close