Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சேதாரத்தை அவரே ஈடு செய்ய வேண்டும்...' - ராம் ரஹிம் சிங்கிற்கு எதிராக கொந்தளித்த நீதிமன்றங்கள்!

சாமியார் கும்ரீத் ராம் ரஹிம்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், ராம் ரஹிம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ள ஹரியானா மாநில சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், தண்டனை விவரம் வரும் 28-ம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதையடுத்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு வட இந்திய பகுதிகளில் கலவரம் வெடித்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றங்கள், 'இப்போது நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் ஏற்படும் சேதாரங்களுக்கு ராம் ரஹிம் சிங்கின் உடைமைகளில் இருந்து ஈடு செய்யப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளது. 

ராம் ரஹிம் சிங்

ஹரியானா மாநிலத்தில், பஞ்சகுலா  நகரத்தில் 'தேரா சச்சா சவுதா' அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவரான கும்ரீத் ரஹிம்சிங் மீது 2002-ம் ஆண்டு, பாலியல் வழக்குப் பதிவுசெய்ய பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றம் சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டது. 50 வயதுடைய கும்ரீத் தன்னுடையப் பக்தர்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்துவந்தது. 

இந்நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், ராம் ரஹிம் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், சாமியார் ராம் ரஹிம்க்கான தண்டனை விவரங்கள் குறித்து வருகிற 28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சாமியாரின் ஆதரவாளர்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். பஞ்சாப்பில் ரயில் நிலையம், அரசு அலுவலகங்கள் தீ வைக்கப்பட்டுள்ளன.

கலவரத்தில் ராம் ரஹிம் ஆதரவாளர்கள்

பஞ்சாப், ஹரியானாவில் 50 இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. வன்முறையில் பலர் பலியாகியுள்ளனர் என்று தகவல் வந்து கொண்டிருக்கின்றது. 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வன்முறையாளர்கள் காவல்துறை, ஊடக வாகனங்களைத் தீவைத்து எரித்தனர். போலீஸ் நிலையம் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. காவல்துறையினர், செய்தியாளர்கள் மீது கற்கள் வீசி வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில்தான் நீதிமன்றங்கள், 'சேதாரத்துக்கு ராம் ரஹிம் சிங்தான் பொறுப்பு' என்று கூறியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close