Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வன்முறை எதிரொலி... டெல்லியிலும் 144 தடை உத்தரவு..! பிரதமர் மோடி கண்டனம்

ஹரியானா மாநிலத்தில், பஞ்சகுலா நகரத்தில் 'தேரா சச்சா சவுதா' அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவரான கும்ரீத் ரஹிம்சிங் மீது 2002-ம் ஆண்டு, பாலியல் வழக்குப் பதிவுசெய்ய ஹரியானா உயர் நீதிமன்றம் சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டது. 50 வயதுடைய கும்ரீத் தன்னுடைய பக்தர்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்துவந்தது. 

வன்முறை

இந்நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், ராம் ரஹிம் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், சாமியார் ராம் ரஹிம்க்கான தண்டனை விவரங்கள் குறித்து வருகிற 28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சாமியாரின் ஆதரவாளர்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஹரியானா, பஞ்சாப்பைத் தொடர்ந்து டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்திலும் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லியில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மோடி


இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று நடைபெற்ற வன்முறைச் சம்பவம் வருத்தமளிக்கிறது. இதற்கு என் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் அமைதியை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். சட்டம்- ஒழுங்கு குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறேன். இது தொடர்பாக உள்துறை அமைச்சரிடம் ஆலோசனை நடத்தியுள்ளேன். மீண்டும் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார்

அதேபோல, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close