Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குர்மீத் சிங்கின் பெட்டியைத் தூக்கிச் சென்ற அரசு வழக்கறிஞர்!

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி தண்டனை பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் பெட்டியைத் தூக்கி சென்ற அரசு வழக்கறிஞரை ஹரியானா மாநில அரசு பணி நீக்கம் செய்தது. 

வழக்கறிஞர் குர்தாஸ்சிங் சல்வாரா.


தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது கடந்த 2002-ல் பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குர்மீத் சிங் குற்றவாளி என்று பஞ்ச்குலா சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விபரங்கள் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கலவரத்தால் ஏற்பட்ட இழப்பீடுகளை குர்மீத் சிங்கின் சொத்துகளைக் கொண்டே ஈடுகட்ட வேண்டும் என்று நீதிமன்றம் கண்டிப்பு காட்டியுள்ளது. 

குர்மீத் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டதால், அவர் ஹரியானா மாநிலம் ரோதக் பகுதியில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்படும் போது அவரது பெட்டியை ஹரியானா மாநில அரசின் மூத்த வழக்கறிஞர் குர்தாஸ்சிங் சல்வாரா என்பவர் தூக்கிச் செல்வது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதையடுத்து, குர்தாஸ்சிங் சல்வாராவை பதவி நீக்கம் செய்வதாக ஹரியானா மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் பால்தேவ் ராஜ் மஹாஜன் அறிவித்துள்ளார். குர்மீத் சிங்கின் உறவினராக குர்தாஸ் சிங், தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close