Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீவிரவாதிகள் தாக்குதல்: காஷ்மீரில் 8 பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில், தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எட்டு வீரர்கள் உயிரிழந்தனர்.
 

புல்வாமா


ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், இன்று மாலை தீவிரவாதிகள் திடீரென்று தாக்குதல் நடத்தினர். எல்லைப் பகுதியில், சுமார் மூன்று இடங்களில் இருந்து, கடுமையான ஆயுதங்களைக் கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 4 சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 4 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். மேலும், 5-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தத் தாக்குதலில் காயம் அடைந்தனர்.


தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து, அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு, ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரத்துக்கு இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இதனிடையே, இந்தச் சம்பவத்துக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.


இந்தச் சம்பவத்தால் புல்வாமா மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கு இணையதள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close