Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பீகார் வெள்ளத்துக்கு இதுவரை 440 பேர் பலி!

பீகார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கினால் இதுவரை 440 பேர் இறந்துள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீகார் வெள்ளம்

பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பேருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தினால் பீகாரின் மாநிலத்தில் 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 13 மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. இதுவரை 440 பேர் இறந்துள்ளனர் என்று அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சுமார் 1.70 கோடிக்கும் அதிகமான மக்கள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 260-க்கும் மேற்ப்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலத்துக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.500 கோடி வழங்கி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும் வெள்ள பாதிப்பு பகுதிகளை பிரதமர் மோடி, அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டனர்.

பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருகினால் இதுவரை 440 பேர் இறந்துள்ள செய்தியானது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close