Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினசரி மாற்றம் எதிரொலி - பெட்ரோல் விலை 6 ரூபாய் உயர்வு!

பெட்ரோல் விலை தினசரி மாற்றியமைக்கப்பட்டது முதல்,  லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல்

பெட்ரோல் விலையை தினசரி மாற்றியமைக்க மத்திய அரசு முடிவுசெய்தது. முதல்கட்டமாக புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த மே மாதம் முதல் இந்த முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் இந்த முறை நடைமுறைக்கு வந்தது. அதிலிருந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்பட்டுவருகிறது. 

இதனிடையே, கடந்த ஜூலை முதல் தற்போதுவரை பெட்ரோல் விலை ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, டீசல் விலை ரூ.3.67 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பெட்ரோல், டீசலின் அதிக விலை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 69 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகபட்ச விலையாகும். கடந்த 2014-ம் ஆண்டு, பெட்ரோல் லிட்டருக்கு 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதே அதிகபட்சம் ஆகும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close