Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இடைத்தேர்தல்: டெல்லியில் தொகுதியைத் தக்கவைத்த ஆம் ஆத்மி; கோவாவில் பா.ஜ.க!

இந்தியாவில் காலியாக இருந்த சில தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. கோவா சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் முதல்வர் மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றார். டெல்லி பவனா தொகுதி தேர்தலில் ஆம் ஆத்மி மீண்டும் தக்க வைத்தது.


பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா மாநிலத்தின் முதல்வராக அறிவிக்கபட்டார். இதனால் பனாஜி தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டார். இந்தத் தொகுதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. அதில், மனோகர் பாரிக்கர் 4,803 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால், அவர் தொடர்ந்து முதல்வராக நீடிப்பார்.  வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதும், அடுத்த வாரத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்தார்.

டெல்லியில் பவனா தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. அந்தத் தொகுதியில் ஏற்கெனவே உறுப்பினராக இருந்த  ஆம் ஆத்மியைச் சேர்ந்த வேத் பிரகாஷ் கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இதனால் இந்தத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.

இடைத்தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வெற்றிபெறும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. முதல் சுற்றுகளில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்தாலும் கடைசி சுற்றுகளில் ஆம்ஆத்மி வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றார். இறுதியில் 24,052 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளரை வெற்றிகொண்டார் ஆம்ஆத்மி வேட்பாளர். பா.ஜ.க வேட்பாளர் இரண்டாம் இடம் பிடித்தார்.  பவனா தொகுதி டெல்லியில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி என்பதாலும் தலைநகரத்தில் தற்போது யாருக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்பதை அறியவும் இந்தத் தேர்தல் பயன்படும் என்பதால் இந்தத் தேர்தல் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close