Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறைத்தண்டனை : 'வெயிட்டிங் லிஸ்ட்' சாமியார்கள்!

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத்சிங்குக்கு 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  சிறையில் அடைக்கப்பட்டுள்ள குர்மீத்துக்கு மரணதண்டனை விதிக்க வேண்டுமென வாரணாசியில் சாதுக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். குர்மீத்துக்குத் தண்டனை அளித்த நீதிபதி தன் தீர்ப்பில், '' ஒரு துறவியாகப் பிறருக்கு உபதேசிக்கிற ஒழுக்கத்தை கடைபிடிக்காத இந்தச் சாமியார், வனவிலங்கு போல நடந்துகொண்டவர். இவர் கருணை பெறுவதற்கு தகுதியற்றவர். கடவுள் போல இவரைக் கருதிய பெண் துறவிகளை இச்சையுடன் நடந்து பக்தர்களின் கண்மூடித்தனமான நம்பிக்கையை உடைத்துள்ளார்''  எனக் காட்டமாக விமர்சித்துள்ளார். 

போலிச் சாமியார்கள்

குர்மீத்தையடுத்து பாலியல் பலாத்காரம், கொலை வழக்கில் தண்டனை பெற வேண்டிய வெயிட்டிங் லிஸ்ட்டில் இரு சாமியார்கள் இருக்கின்றனர். இதில், 75 வயது அசாராம் பாபுவும் ஒருவர். குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வந்த அசராம் பாபுவும் இவரின் மகன் நாராயணனும் ஆசிரமத்தில் தங்கியிருந்த குஜராத் சகோதரிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. ராஜஸ்தானில் 16 வயது, பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கும் உள்ளது. 2013ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்ட இவர் ஜோத்பூரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. அசாரம் பாபு வழக்கில், விசாரணையை துரிதமாக நடத்த உத்தரவிட்டும் மந்தகதியில் நடத்துவதாக குஜராத் அரசை உச்சநீதிமன்றம் நேற்று கடுமையாக எச்சரித்துள்ளது.

இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பவர் சாமியார் ராம்பால். இவரும் ஹிரியானாவைச் சேர்ந்தவர்தான். கம்பிக்குப் பின்னால் இருக்கும்  குர்மீத்துக்கும் இவருக்கும் ஹரியானாவில் பலத்த தொழில் போட்டி. இவருக்கு ரோக்டக் மாவட்டத்தில் கரோதா கிராமத்தில் ஆசிரமம் உள்ளது. 2006ம் ஆண்டு சோனு என்பவர் இறந்தது தொடர்பாக சாமியார் ராம்பால் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக, பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையில் ஆஜராகாமல், 43 முறை 'டிமிக்கி ' கொடுத்தார். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. 2014ம் ஆண்டு ஹிசாரில் உள்ள ஆசிரமத்தில், 12 நாள்கள் போராட்டம் நடத்தி இவரை போலீஸார் கைது செய்தனர். தன் பக்தர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி  இவர் பதுங்கியிருந்தார்.  சாமியார் ராம்பாலை போலீஸ் கைது செய்த போது, வன்முறை வெடித்து 6 பேர் கொல்லப்பட்டனர். 11 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் ஹிசார் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close