Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

40 மருத்துவர்கள்... 50 மணிநேரம்... தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்கு அறுவைசிகிச்சை!

இரட்டையர்கள்

 தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று முதல் சிகிச்சை நடைபெற்றுவருகிறது. ஒடிசாவைச் சேர்ந்த ஜெயா - பாலியா என்ற இணைந்த இரட்டையர்களுக்கான அறுவைசிகிச்சையை நடத்துவதற்காக, ஜப்பானைச் சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 40 பேர் கொண்ட குழு இவர்களுக்கான அறுவைசிகிச்சையை நேற்று தொடங்கியுள்ளது.

முழு அறுவைசிகிச்சை சுமார் 50 மணி நேரம் தொடர்ந்து இருக்கலாம் என்றாலும், அறுவைசிகிச்சை ஆரம்பக் கட்டத்தில் 7 முதல் 8 மணி நேரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ''இந்தக் குழந்தைகள் புதிய வாழ்க்கையைத் தொடங்கப் போகிறார்கள்; நான் அவர்களுடன் இருக்கிறேன்'' என்று தன்னுடைய ட்வீட்டின் மூலம் தெரிவித்துள்ளார்.

இரட்டையர்கள் நேற்று அதிகாலை 4.45 மணியளவில் அறுவைசிகிச்சை அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். நரம்பியல் மருத்துவர்கள், பொது மருத்துவர்கள், குழந்தைநல மருத்துவர்கள், பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை மற்றும் கார்டியாலஜிஸ்ட் உள்ளிட்ட 40 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்டுள்ளது. பிறந்து 27 மாதங்களாகும் இந்தக் குழந்தைகளுக்கு ஒடிசா அரசாங்கம் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close