Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய நிஜ ஹீரோவுக்கு வெகுமதி!

abhishek patel

தன் உயிரைப் பணயம்வைத்து, பள்ளிக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய நிஜ ஹீரோவுக்கு, மத்தியப்பிரதேச அரசு வெகுமதியுடன் பாராட்டியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் உள்ள பள்ளி ஒன்றில், 400 குழந்தைகள் படித்துவருகின்றனர். கடந்த வாரம் அந்தப் பள்ளியில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது, வெடிகுண்டு இருக்கும் இடத்தைத் தலைமைக் காவலர் அபிஷேக் பட்டேல் கண்டுபிடித்தார். சற்றும் தாமதிக்காத அபிஷேக், வெடிகுண்டை எடுத்துக்கொண்டு ஓடினார். மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் வெடிகுண்டைப் போட்டார். அவர் வெடிகுண்டை எடுத்துக்கொண்டு ஓடிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. நெட்டிசன்களிடமிருந்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன.

 

 

 

இந்நிலையில், இந்த வீரச்செயலைப் பற்றி கேள்விப்பட்ட மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், அபிஷேக் பட்டேலை நேரில் வரவழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும், அவருக்கு 50,000 ரூபாய் பரிசாக அளித்துள்ளார். 

abishek patel

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close