Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தும் திட்டம்? - மத்திய அரசு விளக்கம்

ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் இருக்கிறதா?, என்ற கேள்விக்கு மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் விளக்கமளித்துள்ளார். 


கறுப்புப் பணம் மற்றும் கள்ளநோட்டுகள் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி, புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த நவம்பரில் அறிவித்தார். இதையடுத்து புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக கடந்த 25-ம் தேதி புதிய 200 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், மத்திய அரசு புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின. புதிய 1,000 ரூபாய் நோட்டுகளுக்கான வடிவம் இறுதிசெய்யப்பட்டு விட்டதாகவும், வரும் டிசம்பர் மாதம் முதல் புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என்றும் கூறப்பட்டது. இந்தத் தகவல்கள் அனைத்தையும் மறுத்துள்ள மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று விளக்கமளித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close