Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக... இந்திய ராணுவத்தில் மெகா சீர்திருத்தம்!

இந்திய ராணுவத்தில், மிகப்பெரிய அளவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக, பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவம்


இந்திய ராணுவத்தில், 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிசெய்துவருகின்றனர். இந்நிலையில், சுதந்திரம் அடைந்த பிறகு முதல்முறையாக ராணுவத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக, மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். இந்திய ராணுவத்தின் திறனை மேம்படுத்த, 99 சீர்திருத்தங்களை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஷேகத்தர் குழு சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.


அவற்றில், 65 பரிந்துரைகளைச் செயல்படுத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது அதில் முக்கியமாக, ராணுவ வீரர்கள், அதிகாரிகள் உட்பட 54,000 பேர் வேறு பணிகளுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர். மேலும், ராணுவத்தில் புதிதாக உயரதிகாரிகள் பதவியும் உருவாக்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 


இந்திய ராணுவத்தின் போரிடும் திறனை மேம்படுத்துவதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அருண் ஜெட்லி, "டோக்லாம் பிரச்னைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தச் சீர்திருத்தங்கள்குறித்து டோக்லாம் பிரச்னைக்கு முன்பே முடிவு எடுக்கப்பட்டிருந்தது. நம் ராணுவத்தின் திறனை மேம்படுத்துவதே இதன் நோக்கம்" என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close