Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தி.மு.க எம்.பி-க்கள் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை தி.மு.க எம்.பி-க்கள் சந்தித்துள்ளனர்.

ராம்நாத் கோவிந்த்


ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைந்ததையடுத்து, அ.தி.மு.க-வில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் வழங்கினர். இதையடுத்து, 'முதல்வர் பழனிசாமியை சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்' என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகின்றன.


ஆனால், 'எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது' என்று ஆளுநர் மறுத்துவிட்டார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்திக்க முடிவுசெய்ததாக, தி.மு.க நேற்று தெரிவித்தது. இந்நிலையில், தி.மு.க எம்.பி-க்கள் கனிமொழி, திருச்சி சிவா, ஆர்.எஸ் பாரதி ஆகியோர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்துள்ளனர்.


அதேபோல, காங்கிரஸ் எம்.பி., அனந்த் சர்மா, கம்யூனிஸ்ட் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோரும் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்துள்ளனர். 'பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக சட்டசபையைக் கூட்ட வேண்டும்' என்று அவர்கள் ராம்நாத்திடம் வலியுறுத்தியுள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close