Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஊதியத்தை நிறுத்தியதா யூகோ வங்கி? - அதிர்ச்சியில் ஊழியர்கள்

ணித்திறன் செயல்பாடு திருப்தி அளிக்காத காரணத்தால் கொல்கத்தா மண்டலத்தில் உள்ள யூகோ வங்கியின் அனைத்துக் கிளைகளின் ஊழியர்களின் ஊதியத்தை நிறுத்துமாறு மண்டல மேலாளர் பரிந்துரை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக, வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு அவர் அனுப்பியுள்ள பரிந்துரை கடிதத்தில், ’ கொல்கத்தா நகர் கிளை, ஷ்யாம் பஜார் கிளை உள்ளிட்ட 11 கிளைகளைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களின் ஆகஸ்ட் மாத ஊதியத்தை நிறுத்திவிடலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக வங்கியின் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் மண்டல மேலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள பதில் கடிதத்தில், ’11 கிளைகளின் பணிபுரியும் கடைநிலை ஊழியர் முதல் மேலாளர் வரையிலான அனைத்து ஊழியர்களின் ஊதியத்தை நிறுத்துவது விவேகமான செயல்பாடாக இருக்காது. பணியின் போது சரியாகச் செயல்படாததை நாங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் ஊழியர்களின் தனிப்பட்ட செயல்பாடுகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக ஊதியத்தை நிறுத்துவது அவர்களின் அன்றாட வாழ்வினையும், குடும்பத்தையும் பாதிக்கும் செயலாகும். எனவே, உங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுவதாய் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (தமிழ்நாடு) பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறும்போது, ’ஊதியத்தை நிறுத்தினால் மட்டுமே இந்தப் பிரச்னை முடிந்துவிடாது. ஊதியத்தை நிறுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்த அதிகாரிக்கு யூகோ வங்கி நிர்வாகம் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அத்துடன் இந்தப் பரிந்துரையை உடனடியாக ரத்து செய்து, வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் நிகழாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்’ என்றார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close