Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணை 7 கி.மீ தோளில் சுமந்து சென்ற மத்தியப் படையினர்!

த்தீஸ்கர் மாநிலம் தண்டேவடா மாவட்டதில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனை வரை தோளில் சுமந்து சென்று மத்திய ரிசர்வ் படையினர் அனுமதித்தனர்,

CRPF

சத்தீஸ்கர் மாநிலம் நக்சல்கள் நிறைந்த, பின்தங்கிய நிலையில் இருக்கும் மாநிலம். இங்கு சுகாதார வசதிகள் மிகக் குறைந்த அளவிலே உள்ளன. அடர்ந்த காட்டு பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. ஆனால், அந்தப்பெண் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால் ஏழு கிலோமீட்டர் தூரம் காட்டுப் பகுதியில் நடந்து சென்றாக வேண்டும். 

வாகனங்களும் அந்தப் பகுதியில் செல்ல முடியாது. இதனால் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படையினர், அந்தப் பெண்ணை ஸ்டெச்சரில் வைத்து தோளில் சுமந்து மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இந்த வீடியோ காட்சி ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

மத்திய படையினரின் இந்தச் செயலுக்கு பலரும் தங்களது பாராட்டைத் தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் மாநிலத்தின் மருத்துவ வசதிகள் குறித்து பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. 

Photo & Video: ANI

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close