Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிர்மலா சீதாராமனுக்குக் காத்திருக்கும் சவால்கள்!

பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்குப் பல சவால்கள் காத்திருக்கின்றன.

நிர்மலா சீதாராமன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக மாற்றப்பட்டபோது, தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு மிக முக்கியத் துறையான பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டது. இணையமைச்சராக இருந்த இவர், தற்போது கேபினட் அமைச்சராக ப்ரோமோஷன் பெற்றுள்ளார். இந்தியாவில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பிறகு, பாதுகாப்புத்துறையைக் கையில் ஏந்தும் இரண்டாம் பெண் அமைச்சராகிறார் இவர். 

இத்தகைய சூழலில், பாதுகாப்புத்துறை அமைச்சராக நாளை பொறுப்பேற்க உள்ளார் நிர்மலா. இதையடுத்து நேற்று தரைப்படை, கப்பற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளைச் சேர்ந்த மூன்று தளபதிகளும் நிர்மலா சீதாராமனை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். அவருக்கு, பாதுகாப்பு விவரங்கள்குறித்து விரிவாக விளக்கப்பட்டது. பாதுகாப்புத்துறை என்பதே மிகப்பெரும் சவாலாக இருக்கும் சூழ்நிலையில், பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவது, நவீன மயமாக்குவது உள்ளிட்ட பெரும் சவால்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்காகக் காத்திருக்கின்றன.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close