Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கு - ஒருவருக்கு மரண தண்டனை, இருவருக்கு ஆயுள்!

1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் மும்பை தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளான அபுசலீம் மற்றும் கரீம்முல்லா ஷேக் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது மும்பை நீதிமன்றம்.

அபூசலீம்

கோப்புப்படம்

கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. தொடர்ச்சியாக நடந்த 12 குண்டு வெடிப்புகளில் 200-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்தக் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஏழு பேருக்கு கடந்த ஜூன் மாதம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது மும்பை தடா நீதிமன்றம்.

மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம்மின் கூட்டாளிகளான அபுசலீம், முஸ்தஃபா தோஸா, கரீம்முல்லா ஷாயீக், முகமது தாஹிர், அப்துல் காயீம், பெரோஷ் கான், ரியாஸ் சித்திக் ஆகிய ஏழு பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில் தடா நீதிமன்றம் அபூசலீம், கரீம்முல்லா ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையை விதித்து உறுதிசெய்துள்ளது. மேலும், ரியாஸ் சித்திக் என்ற குற்றவாளிக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெரோஸ் கான் என்பவருக்கு மரண தண்டனை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close