Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம் - உச்ச நீதிமன்றம்!

நீட் தேர்வுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றம்


நீட் தேர்வு தனது மருத்துவக் கனவைப் பறித்ததால், அரியலூர் அனிதா கடந்த வாரம் தற்கொலை செய்து உயிரிழந்தார். அனிதாவின் மறைவையடுத்து, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. இதனிடையே, வழக்கறிஞர் ஜி.எஸ். மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'அனிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். அனிதா மரணத்துக்காக நடைபெறும் போராட்டங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் நடத்த தடைவிதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் நகல் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், "நீட் தேர்வுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம். சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்தினாலே, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அமைதியான போராட்டத்துக்கும் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் போராட்டத்துக்கும் வித்தியாசம் உள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. ஆனால், சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் போராட்டம் இருக்கக் கூடாது" என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு நகல்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close