Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை: ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தம்

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டு கொல்லப்பட்டதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான்

சில நாள்களுக்கு முன்னர் பெங்களூருவில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தீவிர ஹிந்துத்வா விமர்சகராக அறியப்பட்ட கௌரி லங்கேஷ், பெங்களூரு ராஜேஸ்வரி நகர் பகுதியில் வசித்து வந்தார். சமூக ஆர்வலரான கௌரி லங்கேஷ், தீவிர வலதுசாரி எதிர்ப்பாளராக அடையாளம் காணப்பட்டவர். லங்கேஷ் பத்திரிகே என்ற கன்னட பத்திரிகையை நடத்தி வரும் கௌரி லங்கேஷ், ஆங்கிலம் மற்றும் கன்னடப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வந்தவர். மதவாதத்துக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துவந்த கௌரி லங்கேஷுக்கு பல்வேறு சமயங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராஜேஷ்வரி நகரில் உள்ள கௌரி லங்கேஷ் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயரிழந்தார். 

இந்த படுகொலைக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வரும் நேரத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 'கௌரி லங்கேஷின் மரணம் என்னை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதைப் போன்ற சம்பவங்கள் இந்தியாவில் நடக்காது என்று நம்புகிறேன். இந்தியா, கருணையுடனும் முன்னேற்றமடைய வேண்டுமென்றும்  விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close