Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீவிரவாதிகள் தாக்குதல்: காஷ்மீர் போலீஸ்காரர் உயிரிழப்பு!

காஷ்மீர், அனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இம்தியாஸ் அகமது


மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் சென்றுள்ளார். நேற்று அவர் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியை சந்தித்தார். இதனிடையே, நேற்று மாலை அனந்த்நாக் பகுதி அருகே உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தின் மீது தீவிரவாதிகள் திடீரென்று தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் போலீஸ் கான்ஸ்டபிள் இம்தியாஸ் அகமது என்பவர் உயிரிழந்தார். மேலும், இரண்டு போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தாக்குதல் நடைபெற்ற பகுதிக்கு அருகேதான் ராஜ்நாத் சிங் இன்று செல்கிறார். அங்கு போலீஸ்காரர்கள் மற்றும் ராணுவ வீரர்களை அவர் சந்திப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தீவிரவாதிகள் அந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து அங்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close