Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜே.என்.யு மாணவர் தேர்தலில் யாருக்கு செல்வாக்கு அதிகம்?

Delhi JNU Students election

ந்திய அளவிலான பிரச்னைகளுக்கு மட்டுமல்ல... உலக அளவிலான பிரச்னைகளிலும் முதலாவதாகக் குரல் கொடுக்கும் இடமாகத் திகழ்கிறது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யு). 

பல்கலைக்கழகத்தின் 2017-18-ம் ஆண்டு மாணவர் அமைப்புக்கான தேர்தல் கடந்த செப்-8 ஆம் தேதி நடைபெற்றது. 4 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த பள்ளிகளின் ஆலோசகர்கள் 31 பேரைத் தேர்ந்தெடுப்பற்கான  தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 4,620 வாக்குகள் பதிவாகின. இது மொத்த வாக்குகளில் 55 விழுக்காடு ஆகும். 

இடதுசாரி கூட்டணி வெற்றி 

இத்தேர்தலில், எஸ்.எப்.ஐ, எ.ஐ.எஸ்.எ, டி.எஸ்.எஃப் ஆகிய இடதுசாரி மாணவர் அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைந்த இடதுசாரிகள் கூட்டணி (SFI, AISA, DSF – Left Unity), எ.ஐ.எஸ்.எஃப் (AISF), பி.எ.எஸ்.ஓ (BASO) ஆகிய இடதுசாரி மாணவர் அமைப்புகள், பி.எ.பி.எஸ்.எ (BAPSA) என்ற தலித் மாணவர் அமைப்பு, பி,ஜே.பி-யின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி (ABVP), காங்கிரஸின் மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ (NSUI) மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிட்டனர். வழக்கம் போல இந்த ஆண்டும் இடதுசாரி மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பொதுக்குழுவின் பதவிகளில் தலைவராக கீதா குமாரி, துணைத்தலைவராக சிமோன் சோய கான், பொதுச் செயலாளராக டக்கிரலா ஸ்ரீகிருஷ்ணா, இணைப்பொதுச் செயலாளராக சுபான்சு சிங் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இடதுசாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டணி வேட்பாளர்கள்.

JNU Students election

தலைவர் தேர்தல்

அபராஜிதா ராசா (எ.ஐ.எஸ்.எஃப்) 416

கவுரவ் குமார் (சுயேட்சை) 023

கீதா குமாரி (ஒருங்கிணைந்த இடதுசாரிகள் கூட்டணி) 1,506

முகமது பாரோகு ஆலம் (சுயேட்சை) 419

நீதி திரிபாதி (ஏ.பி.வி.பி) 1,042

சபாணா அலி (பி.எ.பி.எஸ்.எ) 935

வ்ரிஸ்ங்கா சிங் (என்.எஸ்.யு.ஐ) 82

நோட்டா 127

வெற்று வாக்குகள் 20

செல்லாத வாக்குகள் 50

துணைத்தலைவர்

துர்கேஷ் குமார் (ஏ.பி.வி.பி) 1,028

பிரான்ஸிஸ் லால்ரேம்சிமா (என்.எஸ்.யு.ஐ) 201

சிமோன் சோய கான் (ஒருங்கிணைந்த இடதுசாரிகள் கூட்டணி) 1,876

சுபோத் குன்வேர் (பி.எ.பி.எஸ்.எ) 910

நோட்டா 495

வெற்று வாக்குகள் 66

செல்லாத வாக்குகள் 44

பொதுச்செயலாளர்

டக்கிரலா ஸ்ரீகிருஷ்ணா (ஒருங்கிணைந்த இடதுசாரிகள் கூட்டணி) 2,082

கரம் பித்யாநாத் குமன் (பி.எ.பி.எஸ்.எ) 854

நிகுஞ் மக்வானா (ஏ.பி.வி.பி) 975

ப்ரீத்தி துருவே (என்.எஸ்.யு.ஐ) 223

நோட்டா 389

வெற்று வாக்குகள் 72

செல்லாத வாக்குகள் 25

இணைச் செயலாளர்

அலிமுதின் (என்.எஸ்.யு.ஐ) 222

முகமது மஹ்தி ஹாசன் (எ.ஐ.எஸ்.எஃப்) 214

பங்கஜ் கேசரி (ஏ.பி.வி.பி) 920

சிவேந்திர குமார் பாண்டே (சுயேட்சை) 60

சுபான்சு சிங் (ஒருங்கிணைந்த இடதுசாரிகள் கூட்டணி) 1,755

வினோத் குமார் (பி.எ.பி.எஸ்.எ) 860

நோட்டா 50

வெற்றி வாக்குகள் 50

செல்லாத வாக்குகள் 38

பிரச்னைகளின் அடிப்படையில் வாக்குகள் பதிவு 

மேலும் துறை ஆலோசகர்கள் பதவிற்கான தேர்தலில், சமூக  அறிவியல் மற்றும் மொழியியல் பிரிவுகளில் ஒருங்கிணைந்த இடதுசாரி மாணவர் கூட்டணியினரே வெற்றி பெற்றுள்ளனர். அறிவியல் துறைகளில் ஏ.பி.வி.பி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். மேலும் சில பிரிவுகளிலும் தேர்தலின் மூலம் வெற்றி பெற்றுள்ளனர். ஏனைய மாணவர் அமைப்புகளான காங்கிரஸோ, தலித் அமைப்போ, எந்த ஒரு பதவியிலும் வெற்றி பெறவில்லை. ஏ.பி.வி.பி-யினர் ஓட்டு விகிதத்தில் முன்னேறியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட தலித் மாணவர் அமைப்பான பி.எ.பி.எஸ்.எ-வும் இந்த ஆண்டு கணிசமான ஓட்டுகளைப் பெற்றுள்ளது. இடதுசாரி அமைப்புகள் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்கவில்லை என்றால், இந்தத் தேர்தலில் இடதுசாரி அமைப்பினர் பெரும்பான்மை இடங்களில் தோல்வியையே தழுவியிருப்பர். மாணவர் நஜீப் காணாமல் போன விவகாரம் அதனைத் தொடர்ந்து இன்னும் பல்வேறு பிரச்னைகளில் இடதுசாரிகளின் செயல்பாடுகள் தீவிரமாக இல்லை என்ற குற்றச்சாட்டு மாணவர்களிடையே இருந்து வருகின்றது. இந்த முறை பல பதவிகளுக்கு அதிகமான எண்ணிக்கையில் நோட்டா வாக்குகள் பதிவாகி உள்ளன. இது இடதுசாரி மாணவர் அமைப்பு மீது,  நடுநிலை மாணவர்களின் நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது.

JNU Students election

ஏ.பி.வி.பி-க்கு இரண்டாம் இடம் 

இதற்கு மேலும் ஓர் உதாரணம்.... அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கன்ஹையா குமார் சார்ந்த மாணவ அமைப்பான ஏ.ஐ.எஸ்.எப்-இன் சார்பில் தலைவர் பதவி வேட்பாளரான அபராஜிதா ராசா. இவர் பெற்ற வாக்குகள் 416 மட்டுமே. இது தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஒரு சுயேட்சை வேட்பாளரைவிட 3 வாக்குகள் குறைவாகும். இந்த ஆண்டு ஏ.பி.வி.பி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இது அக்கட்சியின் பலம் உயர்ந்திருப்பதையே காட்டுகின்றது. ஒட்டு மொத்த வாக்குகள் அடிப்படையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவான வாக்குகளே ஏ.பி.வி.பி பெற்றுள்ளது என்றாலும் அதன் கோட்டைகளான அறிவியல் துறையில் அனைத்து ஆலோசகர் பதவிகளையும் முழுவதுமாகக் கைப்பற்றி இந்த ஆண்டும் தனது வசத்திலேயே வைத்துக்கொண்டது. 

இதற்கு அடுத்த இடத்தில் அம்பேத்கர் சிந்தனையை மையமிட்டு உருவாக்கப்பட்ட பி.ஏ.பி.எஸ்.ஏ என்ற மாணவர் அமைப்பு உள்ளது. கடந்த ஆண்டு தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளரைவிட குறைவான வாக்குகளையே இந்த ஆண்டு பெற்றுள்ளனர் என்ற போதும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்த ஆண்டு இவ்வமைப்பின் மதிப்பு மாணவர்களிடையே உயர்ந்துள்ளது என்பதையே காட்டுகின்றது. மாணவர் சேர்க்கையில் எண்ணிக்கை குறைக்கப்பட்டது, மற்றுமோர் இடதுசாரி அமைப்பு தனித்துப் போட்டியிட்டது, பி.ஏ.எஸ்.ஓ என்ற இடதுசாரி அமைப்பு புதிதாகத் தேர்தல் அரசியலுக்கு வந்தது போன்ற காரணங்கள் இடதுசாரிகளின் வாக்கு எண்ணிக்கையை குறைத்துவிட்டது. ஆனாலும், கடந்தகால பிரச்னைகளில் இடதுசாரி மாணவ அமைப்புகளின் செயல்பாடுகள் மீது நடுநிலை மாணவர்கள் மற்றும் கட்சி சாராத பிற மாணவர்களின் நம்பிக்கை இழந்ததே, வாக்குகள் குறைவுக்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close