Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமர்நாத் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

அமர்நாத் யாத்ரிகர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 


காஷ்மீர் மாநிலம் அமர்நாத்துக்குச் சென்ற யாத்ரிகர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. காஷ்மீர் மாநிலம் ஆரிகாம் மற்றும் நௌகாம் பகுதியில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் அமர்நாத் யாத்ரிகர்கள் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய அபு இஸ்மாயில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதவிர மற்றொரு தீவிரவாதியும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த இருவரும் லஷ்கர்-இ.தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் கலவரம் பரவாமல் இருப்பதற்காக ஶ்ரீநகர் முழுவதும் இணைய வசதி முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், ஶ்ரீநகர் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close