Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தெலுங்கானா மாநிலத்தில் வெடித்துச் சிதறிய சிலிண்டர் கிடங்கு!

தெலுங்கானா, telengana

தெலுங்கானா மாநிலத்தின், ஹைதராபாத் நகர் அருகே உள்ள எரிவாயு சிலிண்டர் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், அந்தப் பகுதியே ஸ்தம்பித்துப் போயுள்ளது. அங்கு, சிலிண்டர்கள் குவிக்கப்பட்டிருப்பதால், மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹைதராபாத் நகரின் அருகே உள்ள செர்லாபள்ளி பகுதியில், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்துக்குச் சொந்தமான ஓர் எரிவாயு சிலிண்டர் கிடங்கு இயங்கிவருகிறது. இங்கு, நேற்றிரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள பல பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள், இந்தக் கிடங்கில் குவிக்கப்பட்டிருந்ததால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் துரிதமாகச் செயல்பட்டுவருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டவுடன், உள்ளிருந்த சிலிண்டர்கள் வெடித்துச் சிதற ஆரம்பித்தன. இதனால், தீ மளமளவெனப் பரவத் தொடங்கியது. தூக்கி வீசப்பட்ட சிலிண்டர்கள், அருகிலிருந்த குடியிருப்புப் பகுதிகளுக்குள் வந்து விழுந்தது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத பொதுமக்கள், அலறி அடித்துக்கொண்டு ஓடினர். சம்பவ இடத்துக்கு உடனடியாக ஆறு தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. உயிர்ச்சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்த விவரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அப்பகுதியில், புகை சூழ்ந்திருப்பதால், அருகில் உள்ள விமான நிலையத்துக்கு வரும் விமானங்கள் ஏறவோ, தரையிறங்கவோ தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close