Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றபோது, பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

border

கடந்த சில நாள்களாகவே, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. கடந்த இரண்டு நாள்களாக, பாகிஸ்தான் ராணுவம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்திவருகிறது. நேற்று நடந்த தாக்குதலில், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். நேற்றிரவும் அந்தப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. இன்று காலை வரை நீடித்த அந்தத் தாக்குதலில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் எல்லைப் பகுதியில், இரண்டு தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றபோது பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், தீவிரவாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close