Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அந்தமானுக்கு பயம் காட்டிச்சென்ற நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவு!

இன்று அதிகாலை, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு, மக்களை அச்சத்தில் வைத்துள்ளது.

நிலநடுக்கம்

வங்காள விரிகுடா பகுதியில், சுமார் 300-க்கும் மேற்பட்ட தீவுகளால் நிறைந்த பகுதி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள். வங்காள விரிகுடாவில் உள்ள பல தீவுகளில், பூமிக்கு அடியில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில், இன்று அதிகாலை சுமார் 4.08 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகியுள்ளதாக, இந்தியப் புவிசார் ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால், பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் ஏற்படாதபோதும், லேசான அதிர்வுகளை வீட்டில் இருந்த மக்கள் உணர்ந்துள்ளனர். பாதிப்புகள், ஏற்பட்ட சேதங்கள்குறித்த முழு விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. மிதமான நிலநடுக்கம் என்பதால், சுனாமி வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதுவரை சுனாமி எச்சரிக்கையும் அந்தமான் தீவுகளுக்கு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close