Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்ரம்ப் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கப் போகும் சுஷ்மா ஸ்வராஜ்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஐ.நா சபை சம்பந்தமான பல்வேறு கூட்டங்களில் பங்கேற்க அமெரிக்கா செல்ல உள்ளார். அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமை வகிக்கும் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜ்

ஐ.நா சபை சம்பந்தமான கூட்டங்களில் பங்கேற்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இன்று அமெரிக்கா புறப்படுகிறார். 7 நாள்களுக்கு நீளும் இந்தப் பயணத்தில் ஐ.நா சபை சார்ந்த பல்வேறு கூட்டங்களில் தொடர்ச்சியாக பங்கேற்று இந்தியா சார்பில் கருத்துகளை எடுத்துரைக்க உள்ளார். இதையொட்டி அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உலகளாவிய தீவிரவாதத்துக்கு எதிராக கூட்டம் ஒன்றுக்கு தலைமை வகிக்க உள்ளார். இதிலும் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொள்கிறார். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

சமீபத்தில் அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி பயணம் செய்த போது, அந்நாட்டு தரப்பில், 'இந்தியா மற்றும் அமெரிக்கா பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்தை ஒழித்தல் ஆகியவற்றில் கூட்டாக செயல்படும்' என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் தலைமை வகிக்கும் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்கிறார்.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close