Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள்!

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் உறுப்பினர்கள் காஷ்மீருக்குப் பயணம் செய்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தற்போது நிலவி வரும் சூழல்குறித்து அறிவதற்காகவும் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

மன்மோகன் சிங்

கடந்த பல மாதங்களாகவே காஷ்மீரில் இருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது. இதனால், காஷ்மீரின் எல்லையோரப் பகுதிகளில் அமைதியற்ற நிலைமை நீடித்து வருகிறது. இந்நிலையில், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் காஷ்மீர் சென்றுள்ளனர். குலாம் நபி அசாத், ப.சிதம்பரம் உள்ளிட்ட பலரும் இந்த குழுவில் உள்ளனர். அவர்கள் காஷ்மீரின் எதிர்க்கட்சிகள், ஷியா அமைப்புகள், வியாபாரிகள், பத்திரிகையாளர்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்து உரையாட உள்ளனர். இருப்பினும், பிரிவினைவாதிகளோடு இந்தக் குழு எந்த சந்திப்பும் நடத்தப் போவதில்லை என்றும் தெரிவித்துவிட்டது. 

காஷ்மீரில் நிலவி வரும் பிரச்னை குறித்து காங்கிரஸ் தரப்பு, 'மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு யாருடன் பேசினால் காஷ்மீரில் நிலவி வரும் பிரச்னைக்கு முடிவுகட்ட முடியும் என்பது நன்றாகவே தெரியும். ஆனால், அவர்கள் அந்த தரப்பினருடன் பேச மறுக்கிறார்கள். அவர்களுடன் அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை சீக்கிரமே முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்' என்று தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close